பக்கம்:அறவோர் மு. வ.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அறவோர் மு. வ.


திருவள்ளுவர் பெருமை

திருவள்ளுவரிடத்து டாக்டர் மு. வ. அவர்கள் காட்டிய பெருமதிப்பு அவர் எழுதிய "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" எனும் நூலால் விளங்கும்.

"உலகமெல்லாம் போற்றும் மருத்துவர் ஒருவர் சொல்லும் அறிவுரை என்று தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி உலகம் போற்றும் மருத்துவர் - மன நோய் மருத்துவர் - திருவள்ளுவர். அவர் சொல்கிறார்: ஒப்பு அல்லாதவர்களிடத்தும் தோற்றுப் போவதே சான்றோரின் தன்மை என்கிறார். அவருடைய அறிவுரையைக் கண்மூடித் தன்மையோடு ஏற்றுக் கொள்வதில் தீமை ஒன்றும் இல்லை. பல தலைமுறைகளாக உலகம் பின்பற்றி நன்மை கண்டு நற்சான்று அளித்துப் போற்றிய முறை அது. ஆகையால் முன்னும் பின்னும் எண்ணாமல் அந்த முறையைப் போற்றுவது நல்லது."40

மேலும், எண்பது பக்கங்கள் கொண்ட இந்நூலில் பின் வரும் ஏழு குறட்பாக்களின் முதல் அடி தக்க இடங்களில் எடுத்தாளப் பெற்றிருக்கக் காணலாம்.

'அன்பின் வழிவந்த கேண்மை'41
'ஊடலில் தோற்றவர் வென்றார்'42
'இளைதாக முள்மரம் கொல்க'43
'வேண்டாமை அன்ன விழுச்செல்வம்'44
'வேண்டின் உண்டாகத் துறக்க' 45
'செவிகைப்பச் சொற்பொறுக்கும்' 46
'யாகாவா ராயினும் நாகாக்க' 47

பழமொழிகளைக் கையாளல்

முன்னைப் பழமையையும் போற்றிப் பின்னைப் அபுதுமையையும் ஏற்றுக்கொண்டு வாழ்வு நடாத்தியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/165&oldid=1224293" இலிருந்து மீள்விக்கப்பட்டது