பக்கம்:அறவோர் மு. வ.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

167

முன்பே, அவைகளுக்குத் தெரியாதபடி இங்கே வருகிறாள். இங்குள்ள வேலைகளைச் செய்கிறாள். ஏதாவது உணவு கிடைக்கும் என்று அவளுடைய குழந்தைகள் அவளைத் தேடிக் கொண்டு இங்கே வருகின்றன. நம் அம்மா கொடுக்கும் பழைய சோற்றையும் காந்திப் போனதையும் கெட்டுப் போனதையும் குழந்தைகளிடம் கொடுத்து, அவைகள் உண்பதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு தன் காய்ந்த வயிற்றுடன் குடிசைக்குத் திரும்புகிறாள்.”60

”நீ பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் படித்த போது தெருக்கோடியில் முறுக்கு வாங்கித் தின்றாயே, நினைவிருக்கிறதா? அந்தக் கிழவி நாளெல்லாம் அந்தச் சின்ன அழுக்குக் கூடையை வைத்துக் கொண்டு கிழிச்சல் கோணியின்மேல் உட்கார்ந்து பெரிய வியாபாரம்” தொடர்ந்து செய்கிறாள் அந்தக் காலம் முதல் இன்று வரையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறாள். கண் பார்வை மங்கிவிட்டதாம். ஆனால் தொழிலை விடமுடியவில்லை. ஏன், தெரியுமா? நாள் தோறும் எவ்வளவு விற்கிறாள். என்ன ஊதியம் கிடைக்கிறது, தெரியுமா? எண்ணிப் பார்த்திருக்கிறாயா? நரைத்துத் திரைத்துப் பழுத்த அந்த உடல் எங்காவது கட்டிலின்மேல் மெத்தென்ற படுக்கையில் படுத்துப் புரண்டு காலம் கழிக்காமல், வெயிலிலும் மழையிலும் காற்றிலும் பனியிலும் துன்பப்பட்டு, அரைமணி கால்மணிக்கு ஒரு முறை ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ காலனா முறுக்கு விற்று, அதில் ஒரு பை ஊதியம் பெறப் பாடுபடுகின்றது! இவ்வாறு கிடைக்கும் சிறு ஊதியமான மூன்றனா நாலனா இல்லையானால் அந்த வற்றிய குடல் கஞ்சி இல்லாமல் பட்டினிகிடக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றதாம். தங்கியிருக்க நிழல் இல்லாமல், அடுப்பு மூட்ட இடம் இல்லாமல் மரத்தடியிலும் சாக்கடைக் கரைகளிலும் மானத்தோடு வாழும் தமிழ்ப் பெண்கள் எத்தனை பேர் தெரியுமா?”61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/170&oldid=1462071" இலிருந்து மீள்விக்கப்பட்டது