பக்கம்:அறவோர் மு. வ.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

183



திருத்துவதே ஆகும். ஆசையோடு போராடுவது அல்ல; அமைப்போடு போராடுவதே ஆகும். பொருட்பற்றைப் போக்குவது அல்ல; பணவேட்டையைப் போக்குவதே ஆகும்"

என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றையச் சமுதாயச் சீர்கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அறவுணர்வு அற்றுப் போனமையும், அறத்தில் பற்று நெகிழ்ந்து போனமையுமே ஆகும் என்கிறார்.

"தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். மக்கள் பலர் கூடிவாழும் சமுதாய வாழ்க்கைக்கு அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்...அரசியலில் அல்லல் விளைப்பதற்கெல்லாம் முதல் காரணம் அறமாகிய அடிப்படையைப் புறக்கணிப்பதுதான் என்று உணர வேண்டும்."

-அறமும் அரசியலும், ப. 40

இவ்வாறு அறத்திற்குச் சார்பாக நின்று பேசும் அறவோராம் மு. வ. அவர்கள், சமுதாயம் அறத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பவர்களை என்ன செய்கின்றன என்பதனைக் 'கரித்துண்டு' என்ற தம் நாவலில் பின்வருமாறு விளக்குகின்றார்:

"நாம் எல்லோரும் சேர்ந்து என்ன செய்து வருகிறோம் தெரியுமா? அறத்தை நம்பும் நல்லவர்களை முதலில் வறியவர்களாக ஆக்குகிறோம்; பிறகு இரக்கமற்றவர்களாக மாற்றுகிறோம்...மாசற்ற மனிதப் பண்போடு கரவற்ற குழந்தைகளாய்ப் பிறந்து வளர்ந்தவர்களை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/186&oldid=1239580" இலிருந்து மீள்விக்கப்பட்டது