பக்கம்:அறவோர் மு. வ.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

அறவோர் மு.வ.


ஒரு கருவி, அறம் நெறி, வாழ்வே குறிக்கோள் என்பதை மெய்ப்படுத்துவார்கள்."
-அறமும் அரசியலும் - பக். 65 - 66

சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி அங்குள்ள அவலக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய அறவோர் டாக்டர் மு. வ. அவர்கள் 'நெஞ்சில் ஒரு முள்’ என்னும் நாவலில் சமுதாய மாற்றத்திற்கு அனைவரும் ஆற்ற வேண்டிய அரும்பணி இன்னதெனத் தெளிவாகச் சுட்டுகின்றார்:

"இந்த உலக வாழ்க்கையிலும் தனி ஒருவர் எண்ணம் நிறைவேறி விடாது. தொன்றுதொட்டு இதுவரையில் வளர்ந்து வந்துள்ள கருத்துகளும் இன்று உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளும் சேர்ந்தே சமுதாய வாழ்க்கையை உருப்படுத்துகின்றன. மாற்ற முயற்சி செய்யலாம்; உடனே பயன் விளையாது; போதிய பயன் விளையாது. ஆகையால் நம் கடமையைச் செய்வோம்; நடப்பது நடக்கட்டும் என்று இருப்போம். அதுவே அறிவுக்கு அழகு. கடமையைச் செய்வதற்கே நமக்கு உரிமை உண்டு; பயனைப் பற்றிக் கவலைப்படுவது அறியாமை."
-நெஞ்சில் ஒரு முள் - ப. 443 - 444

இதே கருத்தினை 'மண்குடிசை’ நாவலின் இறுதியிலும் தெளிவுறுத்துகின்றார்:

"உலகத்தைத் திருத்த நம் பங்கு முயற்சி செய்வோம். பணவேட்டையும் புகழ் வேட்டையும் அவற்றால் ஆகிய பலவகை ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமுதாயம் சீராக அமைவதற்கு உரிய வகையில் அறிவை வளர்ப்போம்; அறநெறியைப் பரப்புவோம். உடனே பயன் காண முடியாமல் போகலாம். கவலை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/189&oldid=1239586" இலிருந்து மீள்விக்கப்பட்டது