பக்கம்:அறவோர் மு. வ.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
VI

தண்டமிழ்ச் சான்றோர்

டாக்டர் மு. வ.

எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பாலும் உண்மையாலும் உயரிய பண்பாட்டாலும் உலகத்தார் உள்ளத்திலெல்லாம் நிறைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பெருந்தகை டாக்டர் மு. வ. அவர்களாவர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காவலனாயும் பாவலனாயும் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய குல மன்னன், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களால் இம் மண்ணுலகம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டான். சிலர் பலருக்காக வாழ்வதனால் உலகின் இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயுளது. இம்முறையில் இந் நூற்றாண்டில் சீலமுற வாழ்ந்தவர் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. ஆவர். அவர்தம் அடியொற்றி, அவர்தம் வாழ்வு வழியில் மாறா நம்பிக்கை கொண்டு பெரு வாழ்வுதூய வாழ்வு - வாழ்ந்தவர் டாக்டர் மு. வ. அவர்கள் ஆவர்.

நவசக்தி அளித்த தமிழார்வம்

வடாற்காடு மாவட்டத்தில் வாலாசாவிற்கு அருகில் உள்ள வேலம் என்னும் சிற்றூரே நம் பேராசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/191&oldid=1224390" இலிருந்து மீள்விக்கப்பட்டது