பக்கம்:அறவோர் மு. வ.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அறவோர் மு. வ.


இந்திய விடுதலைப் போராட்ட நூற்றாண்டு விழா 1957-ல் நாடெங்கும் கொண்டாடப் பெற்றது. தமிழ் நாட்டு அரசாங்கம் - அப்போது அதன் பெயர் சென்னை அரசாங்கம் - முத்தமிழின் மூச்சான அறிஞர் பெருமக்களைப் பாராட்ட எண்ணி, இயற்றமிழுக்கு டாக்டர் மு. வ. அவர்களையும், இசைத் தமிழுக்குத் திருமதி. கே. பி. சுந்தராம்பாள் அவர்களையும், நாடகத் தமிழுக்குப் பம்மல் பி. சம்பந்த முதலியார் அவர்களையும் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது, இவர் எழுதிய 'அகல் விளக்கு' என்னும் நாவலுக்கு 1963 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி பரிசு ரூபாய் ஐயாயிரம் கிடைத்தது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசினைக் 'கள்ளோ காவியமோ?' 'கி. பி. 2000, மொழியியற் கட்டுரைகள்' முதலிய நூல்கள் பெற்றன.

துணைவேந்தரானார்

1939 தொடங்கி 1961 ஆம் ஆண்டு ஜூன் வரை பச்சையப்பர் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றிய டாக்டர் மு. வ. அவர்கள் 1961 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியரானார்கள். தமிழ். அன்பர்களின் - மாணவர்களின் இதய வேந்தராக விளங்கிய மு. வ. அவர்கள், 1971 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் நாள் தொடங்கி, மூன்றாண்டுக் காலம் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி வகித்தார். இவ்வாண்டு, மீண்டும் ஒரு முறை மூன்றாண்டுக் காலத்திற்கு அப்பதவி நீட்டிக்கப்பட்டது.

இறுதியில் அவர் வாழ்வு 10.10.1974 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு முடிவெய்தியது.

அமெரிக்காவின் மதிப்பு

மேலை நாட்டுப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் 'இல்லினாய்ஸ்' (Illinois) பல்கலைக்கழகம் இவருக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/195&oldid=1224413" இலிருந்து மீள்விக்கப்பட்டது