பக்கம்:அறவோர் மு. வ.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
VII

அறவோர் மு. வ. அவர்களின்

வாழ்வியற் சிந்தனைகள்

அறவோர் மு. வ. அவர்கள் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிய சான்றோர் ஆவர். தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றிய நல்ல சிந்தனையாளர். தமிழினம் சிறக்க, தழைக்க அவர் பல சிந்தனைகளைச் சமுதாய மேம்பாட்டிற்கெனத் தந்துள்ளார். அவர்தம் கருத்துகளை உணர்ந்து தெளிந்தவர்கள் வாழ்க்கையில் வழக்குதல் இலராக வாழ்வர். குறிப்பாகக் குடும்ப வாழ்விற்கெனச் சீரிய சிந்தனைகளைத் தந்தவர் அறவோர் மு. வ. ஆவர். அவர்தம் சிந்தனைகளில் ஒரு சில இவண் சுட்டப்படுகின்றன.

★ வாழ்க்கையில் பிணக்கு வந்தபோதெல்லாம் அறிவு இருந்து பயன் இல்லை. அன்பு இருந்தால் நன்மை உண்டு.

★ கடவுளின் படைப்பை உள்ளபடியே மதித்து வாழ்வது தான் ஆத்திகம். கடவுளின் உருவத்தை மட்டும் வழிபடுவது ஆத்திகம் அல்ல; அவருடைய படைப்பில் உண்மைகளை உணர்ந்து மதித்து வாழ்வதே ஆத்திகம்.

★ தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். மக்கள் பலர் கூடி வாழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/198&oldid=1224424" இலிருந்து மீள்விக்கப்பட்டது