பக்கம்:அறவோர் மு. வ.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

197

நிலையத்தில் தாமரையிலைத் தண்ணீர் போன்ற மனப்பான்மையும் உடையவர்கள் இரண்டாம் சாதி; மூன்றாம் சாதியினர் குடும்பத்தில் பற்றில்லாமல் வெளியே ஒருத்தியிடம் அல்லது சிலரிடம் காதல் கொள்ளுபவர்கள், திருமணம் செய்து கொள்ளாமலே உண்மையான பிரமசாரிகளாய் வாழ்பவர்கள். அடுத்த சாதியினர்; திருமணம் செய்து கொள்ளாமல் மனம் போன போக்கில் கண்ட பெண்களோடு உரிமை வாழ்க்கை நடத்துபவர்கள் ஐந்தாம் சாதி.

★ கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர். கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுதுபோக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர்; இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

★ அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே என்று நான் சொல்வேனேயானால், அது உனக்கும் உன்னைப் போன்ற பெண்களுக்கும் மட்டும் சொல்லும் அறிவுரை என்று எண்ணாதே. என்னுடன் பழகும் நண்பர்களான ஆண்கள் பலர்க்கு இதையே நான் சொல்லியிருக்கிறேன். 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்கவேண்டும்; ஒரு வேளை கணவனும் இன்னொரு வேளை மனைவியுமாக விட்டுக் கொடுத்தால் தான் வாழ்க்கை எளிதாக நடக்கும்.


13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/200&oldid=1224429" இலிருந்து மீள்விக்கப்பட்டது