பக்கம்:அறவோர் மு. வ.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அறவோர் மு. வ.

வேண்டும். ஒரு தலைமுறை வரையில் இந்த நிலைக்கு இடம் கொடுப்போமானால், அடுத்த தலைமுறையிலேயே அறிவியல் நூல்கள் பல, தாய்மொழியிலேயே இயற்றப்பட்டுவிடும். இந்தத் தலைமுறையில் தாய் மொழியில் சிந்தனை வளர இடம் கொடுப்போம். அடுத்த தலைமுறையில் நூல்கள் எழ வழிவகுத்தவர்களாவோம். இந்த நாட்டில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை. தொன்றுதொட்டு மூளை வளம் உள்ள நாடு இது. ஆதலின் நம்பிக்கை கொள்வோம்; துணிவோம்.

  • மனிதன் உடம்போடு வாழ வேண்டும்; மனத்தோடு வாழ வேண்டும். மின்சாரம் முதலிய சக்திகளைக் கண்டுபிடித்து வசதிகளைப் பெருக்குவது மட்டும் போதாது. நோய் குறைந்த உடம்பும், கவலை குறைந்த மனமும் பெறுவதற்கு வழிதேட வேண்டும்.
  • பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவைகளுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை; பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வம்பும் தும்பும் செய் கின்றது; பேச்சு வளர்கின்றது: பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.
  • அந்த மலர்கள் என்னோடு பேசுவனபோல் இருக்கின்றன. அவைகள் அப்படியே இருக்கட்டும். வாழ்க்கையைப் பற்றி அவைகள் என்னவோ சொல்கின்றன; உணர்த்துகின்றன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/211&oldid=1224469" இலிருந்து மீள்விக்கப்பட்டது