பக்கம்:அறவோர் மு. வ.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அறவோர் மு. வ


அழிவதா? இது என்ன நாகரிகம். என்ன அரசியல்! என்ன விஞ்ஞானம்! வெறிபிடித்த கூட்டம். அதன் செயல்களுக்குப் போர்முறை என்று பெயரா?"
- அந்த நாள், பக். 121

என்ற பகுதி பிரதிபலிக்கின்றது. போர் என்ற பெயரால் உலகத்தைப் பொழாக்குகின்றவர்களை விலங்குகள் என்று கருதுகின்றார்.

"எதிரிகள் யாராக இருந்தாலும் போர் என்ற பெயரால் உலகத்தைப் பாழாக்குகின்றவர்கள் பொல்லாத விலங்குகள். அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?"
- அந்த நாள், பக். 136

போர் இல்லாத அமைதியான ஓர் அமைப்பைக் காண வேண்டும் என்றால் கலைஞர்கள் மாற வேண்டும். கலை தான் பொதுமக்கள் மனத்தை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது என்கின்றார்.

"கலைஞர்கள் முதலில் மாற வேண்டும். கல்வி நிலையங்களில் நாட்டு வரலாறு, நாடகம், இசை, ஓவியம் முதலான எல்லாத் துறைகளிலும் போர் என்றால் அநாகரிகம் என்ற பாடம் அடிப்படையாக அமைய வேண்டும்."
- அந்த நாள், பக். 89
"பொதுமக்கள் மனத்தைக் கலைதான் மாற்ற முடியும். கலையில் பாதிப்பேர் போர்ப் பேயை வழிபடுவதால் மனம் மாறுவதும் அருமைதான். ஆனால் நான் சொல்வது அதே அடிப்படையை வைத்துக் கொண்டு தான். கலைஞர்கள் மனம் மாறினால் கலையும் மாறும்; பொது மக்களின் மனமும் மாறும். கலைஞர்கள் போரைப் புகழக் கூச வேண்டும்; படிக்கக் கூச வேண்டும். நாடக மேடைகளில் நாடகமாக்கிப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/31&oldid=1236331" இலிருந்து மீள்விக்கப்பட்டது