பக்கம்:அறவோர் மு. வ.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

75

நின்று பாத்திரங்களின் போக்கையொட்டி, கருத்துரை வழங்கியிருந்தால், டாக்டர் மு. வ. சிந்தனையாளர் என்ற வகையில் போற்றப் பெற்றிருப்பார்; ஆனால் தாம் படைத்த 'பேராசிரியர் கமலக்கண்ணர்' வாயிலாக வெளிப்படுத்தி அவர் ஒரு கலைஞராக வெற்றி பெற்றுள்ளார்.

“கற்பு என்றால் வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஒருத்தியாக உண்மையாக வாழ்வது என்று சொல்வார்கள். அது பழங்காலத்திற்கு மிகப் பொருந்தும். பழங்காலத்தில் கைத்தொழில் வளர்ச்சி மட்டும் இருந்தது. இந்தக் காலத்தில் யந்திரத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆராய்தலும் அனுபவித்தலும் மிகுதியாக உள்ள காலம் இது. ஆகவே ஒருவனை விட்டு இன்னொருவனுடனும் வாழும்படி நேரலாம். ஒருவனை விடாமல் இன்னொருவனுடன் வாழ்வதுதான் தவறு. எப்போது எவனுடன் வாழ்கிறாளோ அவனுக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும்: அதுதான் கற்பு". (கரித்துண்டு)

பாத்திரப் படைப்பு

படிப்பாளரின் சிந்தையை என்றும் தொட்டு நிற்கும் கலைக்கூறு பாத்திரப் படைப்பாகும். கருவாலும், கதைப் பின்னலாலும் வெற்றிபெற முடியாத நாவலைப் பாத்திரப் படைப்பால் வெற்றிபெறச் செய்ய இயலும். காலத்தைக் கடந்து படைப்பாளனையும் படிப்பாளனையும் இணைத்து நிற்கும் பாலம் போன்றது பாத்திரப்படைப்பு. சார்லஸ் டிக்கன்ஸ், தாக்கரே, மாப்பசான், அலெச்சி டால்ஸ்டாய் போன்றோர் பாத்திரப் படைப்பு என்பதைத் தங்கள் உணர்வின் படைப்பாகவே கருதியுள்ளனர். தமிழ் நாவலாசிரியர் அகிலன் பாத்திரப்படைப்பு குறித்துக் குறிப்பிடும் கருத்து - படைப்பாளரின் மனவோட்டத்திலிருந்து புறப்படும் உயிர்த் துடிப்பே பாத்திரப் படைப்பு என்பது நன்கு விள்க்கமுறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/78&oldid=1211404" இலிருந்து மீள்விக்கப்பட்டது