பக்கம்:அறவோர் மு. வ.pdf/83

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
அறவோர் மு. வ.
 

'பேராசிரியர் கமலக்கண்ணன்’ என்னும் பாத்திரத்தை முதலாளித்துவச் சிந்தனையின் பிரதிநிதியாயும், குமரேசன் என்னும் பாத்திரத்தை-சமத்துவச் சிந்தனையின் பிரதிநிதியாகவும் படைத்துள்ளார்.

நாவலாசிரியர் மு.வ.வின் படைப்புகளில் சிந்தனையாளர் மு.வ.வையும் சில பாத்திரங்களில் காண முடிகிறது.

நாவலாசிரியர்களின் படைப்பாற்றல் படிப்பாளரின் நெஞ்சில் நிழலாடச் செய்கின்ற பாத்திரப் படைப்பின் திறனைப் பொறுத்தும் அமைவதுண்டு. ஜெயகாந்தனின் கங்காவும்; அகிலனின் தணிகாசலமும், பார்த்தசாரதியின் பரணியும், தகழியின் கருத்தம்மாவும், படிப்பாளரின் நினைவிலே நிலைபேற்றைப் பெற்றதைப் போல் நாவலாசிரியர் டாக்டர் மு.வ.வின் அல்லி (அல்லி), சந்திரன் (அகல் விளக்கு), ஆணவர் (கயமை), செல்வநாயகம் (மலர்விழி) ஆகியோர் சிறப்பிடம் பெறத்தக்கவராவர். கருத்துக் கலைஞரான டாக்டர் மு.வ. வின் அறவாழி (அல்லி) பாத்திரப்படைப்பில் குறிப்பிடத்தகுந்த பாத்திரமாகும்.

படைப்பின் சங்கிலித்தன்மை

நாவலாசிரியர்கள் சிலர் தம் சிறுகதையில் வரும் கருவையே நாவல் ஆக்குவதுண்டு. (ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தின் வளர்ச்சியே சில நேரங்களில் சில மனிதர்கள் ஆக வளர்ச்சியுற்றது). ஒரு நாவலின் கருவையோ பாத்திரங்களை எழுதும் மற்றொரு நாவலில் வளர்ச்சி நிலையாகவோ-தொடர்ச்சியாகவோ காட்டுவதுண்டு. நிகழ்ச்சிப் பின்னலில் இணைந்துவரும் நாவல்களும் உண்டு. (கள்ளோ? காவியமோ?, கரித்துண்டு). கள்ளோ? காவியமோ? என்ற நாவலில் வரும் அருளப்பர் அகல்விளக்கில் சொற்பொழிவு ஆற்றும் பேராசிரியராய்ப் படைக்கப் பெற்றுள்ளார். அல்லியில் படைக்கப்பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/83&oldid=1211447" இருந்து மீள்விக்கப்பட்டது