பக்கம்:அறவோர் மு. வ.pdf/88

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
85
 

படுத்த வேண்டிய இடத்தில் பாத்திரங்களின் மன அசைவுகளையும், உணர்வு வெளிப்பாட்டுச் சிக்கலையும் வெளிப்படுத்த நாட்குறிப்பு உத்திமுறையையும் கடித உத்திமுறையையும் கையாண்டுள்ளார். சமகாலப் படைப்பாளர்கள் என்ற நோக்கில் அணுகும்போது அறிஞர் அண்ணா குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள் என்ற நாவலை நாட்குறிப்பு உத்திமுறையிலும், மறைமலையடிகள் 'கோகிலாம்பாள் கடிதங்கள்' என்ற நாவலை கடித உத்திமுறையிலும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கனவாகும். மறைமலையடிகளின் கோகிலாம்பாள் கடிதத்தில் கொண்ட உத்திமுறை சில இடங்களில் கலைத் தன்மையைச் சிதைத்துள்ளது என்பாருமுளர். ஆனால் மு. வ. 'அல்லி’, ‘கரித்துண்டு' ஆகிய நாவல்களில் கையாண்டுள்ள நாட்குறிப்பு, கடித உத்திமுறைகள் அவர், தம் படைப்பாற்றலை உயர்த்துவனவாய் உள்ளன. 'அல்லி', எனும் நாவல் பாலியல் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டதாகும். அல்லி மனவோட்டத்தையும், வாழ்க்கைப் போராட்டத்தையும், பாலுணர்வுச் சிக்கலையும், புற நோக்குநிலையிலிருந்து - ஆசிரியர் எடுத்துரைப்பதாக நாவல் அமைந்திருக்குமானால், அது விமர்சனத்தன்மையதாகப் போயிருக்கும். ஆனால் டாக்டர் மு. வ. அகநோக்கு நிலையில் அல்லியே உரைப்பதாக அமைத்துள்ளார். இந் நோக்குநிலை நாவல் கலைத்தன்மைக்கு உணர்வூட்டியுள்ளது. அல்லியின் அண்ணன் பாலுணர்வால் பாதிக்கப் பெற்றவன். அல்லியிடம் தன் பாலுணர்வுச் சிக்கலை வெளிப்படுத்தப் பண்பாட்டு வழிவந்த உறவுமுறை தடுக்கிறது.

அல்லியின் பார்வையிலிருந்து இந்நாவல் எடுத்துரைக்கப் படுகின்ற காரணத்தால் - சோமுவின் அக உணர்வை - பாலுணர்வுச் சிக்கலைத் தீர்க்க நாட்குறிப்பு உத்தி முறையைக் கையாண்டுள்ளார். நாட்குறிப்பின் வழியே 'அல்லி' சோமுவின் அகச்சிக்கலை ஆழ்ந்து நோக்குவதற்கு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/88&oldid=1211917" இருந்து மீள்விக்கப்பட்டது