பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

"செல்லாத காசாய்ச்‌ சிந்தை சீரழிந்‌ திருந்தேன்‌; சேர்த்துக்‌
கல்லாத தெல்லாம்‌ காட்டிக்‌ கற்பித்தீர்‌! கனிய இன்று,
சொல்லாத தெல்லாம்‌ சொல்லிச்‌ சோதனை செய்கின்‌ றீர்‌! நீர்‌
பொல்லாத மனிதர்‌, போங்கள்‌! போதுமா தயிர்தா" னென்றாள்‌.

மணமகள்‌ மாண்பு


கோங்கரும்‌ பனைய கொங்கை; கொவ்வைவாய்‌ முருந்து மூரல்‌,
தீங்கரும்‌ பனைய சொல்‌,தன்‌ தேவியும்‌ தெளிந்தி ருக்கப்‌
பாங்கரும்‌ தம்பி, பாயாப்‌ பசுவென அமர்ந்தி ருக்கத்‌
தாங்கரும்‌ தயவு கூர்ந்து தமயனும்‌ மொழிய லானான்‌:

"கனிமூலம்‌ காய்‌,பிஞ்‌ சுப்பூ, கவின்தளிர்‌, மரம்‌,வேர்‌, வித்தாம்‌!
பனிமூலம்‌, பருவ மூலம்‌,- பலவும்‌ நாம்‌ பார்ப்போ மேனும்‌,
முனிமூலம்‌, நதியின்‌ மூலம்‌,- முக்கியம்‌ பணத்தின்‌ மூலம்‌,
இனிமேலு மெதற்கு மெங்கும்‌ எவருமா ராயா" ரென்பர்‌.

பெருமைக ளென்ப வெல்லாம்‌ பெற்றிருக்‌ கின்‌ற வீட்டுக்‌
கொருமகள்‌! உவகை யோடும்‌, 'உலகெலாம்‌ புகழா நின்ற
திருமகள்‌ கெட்டா' ளென்பாய்‌ தெரிவையைப்‌ பார்த்த தன்பின்‌!
மருமக ளெனவே வந்திம்‌ மனைபுக மனங்கொள்‌ வாய்‌ தீ!

'செம்பொனை யுருக்கிச்‌ சிற்பி சிற்சக்தி யெனவே வார்க்க,
அம்புவி நோற்கத்‌ தெய்வம்‌ ஆருயி ரளித்த' தென்னத்‌
தம்பிக்கு வாய்த்த அந்தத்‌ தருணியின்‌ தகைமை கூறக்‌
'கம்பனுக்‌ கன்றி, மற்ற கவிஞர்கட்‌ கியலா' தென்பர்‌.

பார்தவம்‌ புரிந்த தேயோ? பணம்தவம்‌ புரித்த தேயோ?
ஊர்தவம்‌ புரிந்த தேயோ? உத்தமி உதிக்க! உற்ற
பேர்தவ மணியாம்‌! அந்தப்‌ பெண்மணி கையைப்‌ பற்ற
யார்தவம்‌ புரிந்தா ரென்றன்‌ ஆருயிர்த்‌ தம்பி யன்றி!