பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பிறனாக எனைநீ எண்ணும்‌ பேதையு மன்று; பேசிப்‌
புறனோகப்‌ புரிந்த போதும்‌ பொறுத்திட இயலும்‌; போற்றும்‌
அறனோக, அதுவு மன்றி ஆடவற் கமைதல் ஆற்றல்‌
மறனோக, மானம்‌ நோக, மனம்நோக வைத்தா யன்றோ?

'பெண்தேடி மணம்செய்‌ விக்கப்‌ பெரிதும்‌நீர்‌ முயல்க!' என்ன,
மண்தேடி வந்து தித்த மலர்மக ளெனவோர் பெண்ணைக்‌
கண்தேடிக்‌ கண்டு வந்து களித்திடச்‌ சொல்லக்‌ காயாப்‌
புண்தேடி வைத்தென்‌ கெஞ்சில்‌, புன்னைகை தேடிக்‌ கொண்டாய்!

சத்தியன்‌, நான்‌ இனி தேசாத்திரியாவே'னெனல்



'எரியெரி' யெனநீ என்றன்‌ இதயத்தை யெரிய வைத்துச்‌
'சிரிசிரி' யெணச்சி ரித்துச்‌ சிறுமையுண் டாக்கி விட்டாய்!
சரிசரி! யினிமே லிந்தச்‌ சங்காத்த மெனக்கு வேண்டாம்;
'திரிதிரி' யெனநான்‌ செல்வேன் தேசாந்திரங்கட் கென்றான்.

உமது தவற்றை உணரியோனெனல்‌



"தன்செயல்‌ தவறென்‌ றோராத்‌ தம்பிக்குத் தமய னானோர்,
வன்செயல்‌ புரிவ தன்றி வாழ்த்திடும்‌ செயலா செய்வார்?
'என்செய லாவ தொன்றும்‌ இல்லையிங்‌ கெல்லாம்‌ ஈசா
நின்செய' லென்னும்‌ நேரா நிலைக்கெனை நெருக்கி னீர்நீர்‌!

கெண்டிக்குக்‌ கிண்ண மொவ்வா தெனக்கிளா கிறுக்கள்‌ போன்றப்‌
'பெண்டின்கால்‌ தூசக்‌ கென்றான்‌ பெண்டாட்டி யொவ்வா' ளென்று
தொண்டுகள்‌ நுவன்றென் நெஞ்சை நோகவே நீங்கள்‌ செய்தும்‌,
சண்டைக்கு நிற்கா மல்நான் சலித்ததும்‌ தவறே யன்றோ?