27
'பாத்திரம் கெட்ட தாயின் பால்கெடும்; பாங்காய்ப் பார்க்கும்
நேத்திரம் கெட்ட தாயின் நெறிகெடும்; நெறியைக் காட்டும்
சாத்திரம் கெட்ட தாயின் சகங்கெடும்; சகத்தில் வாழ்வு
மாத்திரம் கெட்ட தாயின் மனைவியால் கெட்ட' தென்பர்.
திங்களை யிருகூ றாக்கித் திகழ்தக டடித்துளச் சேரச்
செங்கதிர் கம்பி யாக்கிச் செறித்திரு மருங்கும் கோத்து,
'நங்கையே வாடி! உன்றன் நாயக னமைத்தா' னென்னும்
பைங்கிளிக் கூட்டில் வைக்கப் பனிச்சிட்டைப் படையே' லென்றாள்.
தானே ஒரு பெண்ணை தயந்து கொண்டேனெனல்
புத்தமு தென்னப் பன்னிப் புலனினித் திடவே சொன்ன
இத்தனை சொல்லும் 'ஏற்கா தெதிர்பட்டுத் திரும்பிற்' றென்ன
நித்தியன் நினைவு கூர்ந்து நேரிட்டுச், சொன்னான்: நீங்கள்
உத்தமி! என்தா யென்ன உளங்கனிந் துரைத்தீ ரேனும்,
போருமாய்ப் புண்ணாய் வாழ்வு போகாமற் புனைந்து விட்ட.
ஏருமா யெருதா யெங்கள் இல்லற மியங்க, என்றும்
நீருமாய் நிலமாய் வீடு நிறைவுற, நெடுநாள் நானே
நாருமாய் மலராய் நாடி நங்கையை வரித்தே' னென்றான்.
மாணிக்கம் மனம் வருந்துதல்
"வெண்ணெயோத் திளகும் நெஞ்சும் வெல்லமொத் தினிக்கும் சொல்லும்
பண்ணையொத் துழைக்கச் செய்யும் பண்புடை யோனுக் கேற்ற
பெண்ணையொத் தனித்தா' ளென்னும் பெடுமையெற் கின்றிப் பின்னும்
புண்ணயொத் துளையச் செய்தாய்; போ! "வெனப் புலன்று பேனாள்.