31
வெறுக்கத்தக்கன செய்யவில்லையென வேணி விளம்பல்
என்றெழில் செல்வி நெஞ்சின் இருள்நீக்கு மினிய சொல்லை
தன்றெனக் கேட்ட வேணி நலிவற நாணுற்றாங் "குன்
பொன் றளிர்க் கைமே லாணை புகன்றுண்மை புகல்வே னக்கா!
வொன்றிலும் தவறென் றொன்றென் னுளமெப்பிச் செய்தே னில்லை!
ஐயகோ! அவரே ஆரவ அருஞ்சுட ராயெ ரித்தார்;
பெய்யவே செய்தா ரென்மேல் பெருமழை நீரா யன்பை!
உய்யெனப் புயற்சொல் லாலென் உள்ளத்தை யுருத்தா ரக்கா!
செய்யுமா றின்றி நானும் சிந்தையை யிழந்தே" னென்றாள்.
சத்தியன் யுக்திசாலி
நித்தியன் நலத்தை யென்றும் நீங்காது நினைவில் வைத்தும் ,
புத்தியில் பூளை வாடிப் புதுமணப் பெண்ணை வைத்தும்,
எத்தனை யிடையூ றேனும் எதிர்த்துவென் றிதைமு டிக்கச்
சத்தியன் துணிந்து சார்ந்தான் சரிழிகர்த் துணைவி தன்னை!
தன்னருஞ் செல்வம், தாவில் தயை, சீலம், தலைமை, யின்ன
பன்னரும் பண்பால் வாழ்வைப் பயன்படப் பயின்ற தன்றி,
யின்னதை யின்ன வாறா யியற்றுத லினிதென் பாளின்
முன்னின்று முறுவ லித்"தென் மோகன மயிலே! முற்றும்
நொந்தாள் போன்று நுவலல்
காய்தானா இன்னு மன்றேல் கணிதானா?" எனவே சத்யன்,
"வாய்தனைச் சும்மா கொஞ்சம் வைத்திருக் காமல் நானப்
பேய்தனை யொத்தா னோடும் பேசப்போய்ப் பிடித்துப் பேரா
நோய்தனை யுற்றே" னென்று நொந்தாள்போல் நுவன்றாள் செல்வி!