பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

"முன்னேநான் சொன்னே னந்த மொழிகளும் வீணா யிற்று;
பின்னேநீ சொன்னா யுன்றன் பேச்சும்வீ ணாயிற் றந்தோ!
பொன்னான நேரம் வந்து பொருந்துங்கால் போக்கு வான்கொல்!
அன்னையே என்னே! இன்னும் அறிவிவ னறியா" னென்றே.

மாமனை வரவழைத்தல்



விரிந்திடும் மலரில் வண்டாய் வேற்றாரும் விரும்பிக் கேட்டுப்
புரிந்திடச் சொல்ல வல்ல போதகர் எனவே யெண்ணித்
தெரிந்துடன் வந்து சேர்ந்து தெளிவிக்கக் கடித மொன்றை
வரைந்திட லானான் தம்மை வளர்த்ததாய் மாம னார்க்கே!

இரண்டுவா ரங்க ளில்லத் திழுபறி யெதுவு மின்றி
உருண்டபின், ஒருநாள் காலை ஒப்பிலா வுடலு மொப்பத்
திரண்டதோள், சிவந்த கண்,பொய்த் தேசுள்ள முகமாய்த் தீனர்
மருண்டிடும் மமதை வாய்ந்த மாமனார் மனைக்கண் புக்கார்.

தந்தையும் புதல்வியும்



புரசையில் புலவர் கட்கோர் புரவலர்; புரியப் பேசும்
அரசியல் நிபுணர்; 'ஆழ்ந்த ஆராய்ச்சி யாளர்' என்னும்
வரிசையி லொருவ ராகி வந்தவர் தந்தை யென்றே
கரிசனத் துடன் மாணிக்கம் களித்தனள் கரைகா ணாதே!

பரிவுற மகளைக் கூர்ந்து பார்த்தகங் குளிர்ந்தார் தந்தை;
ஒருவருக் கொருவர் முந்தி ஊருடல் நலன்கள் மாற்றிச்
சரிவரக் கேட்டுச் சாற்றும் சடங்குகள் முடியுங் கால், தன்
னிரவுறு துயிலை நீத்தே எழுந்தங்கு வந்தான் சத்யன்.

சத்தியன் விவரம் விளம்புதல்



வாருங்கள் மாமா! உங்கள் வரவுநல் வரவு! வான்கண்
காரெங்கள் கழனி காக்கக் கருணைசெய் வதுபோல் கண்ணால்
பாருங்கள்! பகவான் பார்த்துப் பரிந்தும்மை யனுப்பி னார்போன்ம்!
தீருங்கள்,- தம்பிக் கேற்கத் திருத்துங்கள் செப்பித் தீங்கை!