33
ஏழெட்டுக் கோடிக் கப்பெண் இனிச்சொந்தக் காரி!யேதோ,
ஊழிட்ட பிச்சை யால்தா னொப்பினாள் மணக்க! வொன்றி
வாழட்டு மெனவே நானிவ் வதுவையை முடிக்க வந்தால்,
சீழிட்ட புண்ணா யெண்ணிச் சிதைக்கிறா னிவன்சீ ரின்றி!
பாலும்காத் திருக்கப் பாங்காய்ப் பழமும்காத் திருக்கப் பார்த்துச்
சீலம்காத் திருந்தா ராய்த்து செப்பிய சொல்லீ தன்றோ?
'ஞாலம்காத் திருக்கு மேனும், நற்செயல் புரிதற் காய்நம்
காலம்காத் திருக்கா' தென்றே கவிச்சொற்குப் பழுதுண் டாமோ?
குணக்குன்ற மப்பெண்! பெண்ணைக் கொண்டவ குவல யத்துள்
பணக்குன்ற மாவர்! பாங்காய்ப் பல்லாண்டு காலம் குந்திக்
கணக்கின்றிச் செலவிட் டாலும் கவலையே காணார்! தம்பி
மணக்கின்ற வகைகண் டால்நாம் மகிழ்குன்ற மாவோம் மாமா!
பிடித்ததன் முயலுக் குக்கால் பிறவியில் மூன்றென் பான்போல்
'குடித்தன மொன்றே வாழ்வின் குறிக்கோ'ளென் கின்றான்; கூட்டிப்
படித்ததே படிப்பென் கின்றான்; பாங்காக நீங்கள் பன்னி
எடுத்துரைத் தவனுக் கேற்ப இனிமாற்ற வேண்டு" மென்றான்.
மாமாவின் மாயா சக்தி
பானைக்கு நாமம் போட்டுப் பக்தியென் றொருபேர் வைத்துப்
பூனைக்கு மணியைக் கட்டிப் பூசைகள் புரியப் பண்ணி
ஏனைக்கு ழூக்கட் கேற்ப இச்சகம் பேசித் தன்னை,
யானைக்குக் கரும்புக் கொல்லை யமைந்தவா றமைக்கும் மாமா,