38
அக்காவே அனைத்தும் எனல்
"அன்னையைக் காண்கின் றேன்நா னக்காவி னன்பி லன்றி,
யென்னையும் காண்கின் றேன்மற் றியல்பான அறிவி லேற்கப்
பின்னையு மரசி யாதல் பேச்சிலே காண்கின் றேன்,பின்
தன்னையே தெய்வ மாயும் தயைகாண வைத்த" தென்றாள்.
நித்தியன் மகிழ்ச்சியடைதல்
"காணியே! கரையே! காக்கும் கவின்மிகு தருவே! கற்பி
லாணியே அறைந்த தென்ன அழுத்தமா யழகா யென்றன்
வேணியே மொழிந்த இந்த விவகார விளக்கம் கேட்டவ்
வாணியே புகழ்வாள்! நீவிர் வாழ்த்துவீ" ரெனச்சி ரித்தான்.
வாதம் வேண்டாமெனல்
"நீதமே, நெறியே வாழ்வின் நிலை'யென நினைப்போன் நம்பப்
"போதுமே என்றும் நீங்கள் பொல்லாத மனிதர் போங்கள்!
வாதமே வேண்டா மக்கா வாழ்வினை வழங்க வல்லாள்;
ஏதுமே யில்லை சங்கை யெனக்கிதி" லென்றாள், வேணி!
கிண்டலும் கேலியும்
முருந்தாதல் முகிழ்க்கும் கொவ்வை முறுவலைப் பருகும் நித்யன்,
"பரிந்தாதல் பாராப் பாடு படுங்களைப் பதுதா னேனும்,
வருந்தாத இன்னல் வந்து வருத்திடு மெனினும், வாய்த்த
மருந்தாதற் கெனநீ கற்ற மந்திரம் அதுயா' தென்றான்.
குற்றமற் றரும்பா நின்ற குமுதநல் லிதழ்ம லர்ந்து,
முற்றுநன் முருந்து மூரல் முறுவலை யொளிர மூட்டிச்
சுற்றுமுற் றும்தான் பார்த்துச் சுந்தரி சுருக்கிக் கண்ணைக்
"கற்றஎன் மந்தி ரத்தைக் கழறப்போ திதுவன்" றென்றாள்.