பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

"வானைப்பார்‌! நிலவை வாரி வழங்கிடும்‌ மதியை யும்பார்‌
மீனைப்பா' ரென்ன,.. முன்னால்‌ மேன்‌மாடி யேறி, 'மெச்‌சும்‌
'தேனைப்பார்‌! நறுக்கி வைத்த தேமாவின்‌ துண்டு கள்பார்‌!
மானைப்பா ரென்பின்‌' னென்ன மாணிக்கம்‌ வந்தா ளேந்தி!

மாமா மணம்பற்றிப்‌ பேசுதல்‌


"திருமணம்‌ பற்றிப்‌ பேசித்‌ தெளிந்திடத்‌ தொடங்கும்‌ போதே,
பெருமண முடைய தேமா, பெட்டித்தேன்‌ பெற்றோ மென்றால்‌,
ஒருமண மன்றிங்‌ குற்ற தொன்பது கோடிச்‌ செல்வம்‌
வருமணம்‌! தெய்வம்‌ வாழ்த்தி வழங்கும்நன்‌ மணமீ தன்றோ?

எரித்திடும்‌ வெப்பம்‌, நீரை இல்லாது பண்ணும்‌; ஈரம்‌
பெருத்திடின்‌ வெப்ப வேகம்‌ பிரிந்திடும்‌; பிரியா தொன்‌றிச்
சிரித்திட வென்ற தற்குச்‌ சேவகம்‌ செய்யும்‌ காற்றும்‌!
விரித்திடும்‌ ப௬மை யைநீர்‌! வெளுத்திட வுலர்த்தும்‌ வெப்பம்‌!

ஒன்‌றினை யொன்று வென்றே உயர்ந்திடும்‌ நெருப்போ? நீரோ?
என்றெதை யெதுசெய்‌ தாலும்‌ ஏற்றிடும்‌ நிலமோ? என்றும்‌
வென்றத னுடனே சேர்ந்து வினைபுரி கின்ற காற்றோ?
நன்‌றிது; தீதி தென்றே நாடியார்‌ நவில வல்லார்‌?

திரிந்துகொண் டிருந்த நித்யன்‌ சிறுபிள்ளைப்‌ பருவத்‌ தோர்நாள்‌,
'புரிந்துகொள்‌ வதற்கே லாத புதிரிவ னண்ணா!' வென்று
பரிந்துகொண் டுரைத்தாள்‌ தங்கை; 'பார்வதி! வயது வந்தால்‌
தெரிந்துகொண் டிவனும்‌ வாழ்வான்‌ தெம்பாக,' என்றேன்‌ நானும்‌.

சுரும்புற்‌ற மலர்தா னொப்பச்‌ சூதற்ற வுங்கள்‌ தந்‌தை,
வரம்பற்று வந்தோர்க்‌ கெல்லாம்‌ வாரியே வழங்கி, யாலைக்‌
கரும்புற்ற கோல மாகிக்‌ கடனுற்றுக்‌ காய்ந்த காலை,
பெரும்பற்று வைத்தென்‌ கூடப்‌ பிறந்தாட்காய்‌ நிலத்தை மீட்டேன்‌.