51
சத்தியன் சினந்து சாற்றல்
"புகைவண்டிச் சத்தத் திற்குப் போகவும் எனது கையில்
தொகையுண்டு கொஞ்சம் மிஞ்சி! துயருண்டு பண்ணத் தக்க
பகையுண்டு வீட்டி லென்றால், பணியாரம் சுண்டல் விற்கும்
வகையுண்டு! நீயென் னோடு வழக்குண்டு பண்ண வேண்டாம்!
தென்னையைத் தேள்கொட் டிற்றாம்; தேங்காயைப் போலச் சேர்ந்த
புன்னையை நெறிகட் டிற்றாம்! போதும்போ!" வென்றெ ழுந்தான்.
"அன்னையோ! என்னே பேச்சிஃ தவலப்பேச் சதுதா னாயின்,
என்னையும் இழுத்துக் கொண்டே ஏகுங்க" ளென்றாள், செல்வி!
காலையில் வேலை
கங்குலைக் கழித்துக் காமர் காலையை யிழைத்துக் காணப்
பங்கயம் செழித்தல், பாங்கில் பனிநெய்தல் பழித்தல் பண்ணும்
செங்கதிர் கொழுத்தெ ழாமுன் , செறிதுய லொழித்தெ ழுந்தான்,
மங்குலைக் கிழித்தெ ழும்விண் மதியென்ன விழித்த நித்யன்,
'தோளாண்மை தனிலும், தோட்குத் நுணையாக ஏந்தும் தோலா
வாளாண்மை தனிலும், வந்து வாயாரப் புகழ்ந்து வாழ்த்தும்
கேளாண்மை தனிலும், சற்றும் கெடுதலே யில்லா ஆண்மை
வேளாண்மை' யெனவே வீட்டை விட்டவளன் விரைந்து சென்றான்.
கூலிக்குழைக்கும் சேரி மாதர்கள்
தாலிக்குத் தஙகம் கேட்கத் தமக்கில்லை தகுதி யென்று,
சேலைக்கு மட்டும் வேண்டிச் சிவனைச்சே விக்கச் செல்வோர்
காலைக்குக் காத்தார், கூடை கம்பரி கத்தி யோடும்
கூலிக்குச் சென்றா லன்றிக் குடிக்கக்கூ ழில்லா தோராய்!