52
வெந்ததைத் தின்று, வீழ்ந்து வேளைவந் தால்கண் மூடக்
கந்தலைக் கண்ட மேனி கடுமுடை நாறக் கண்ணீர்
சிந்தினோர், சிரிப்போ ராகிச் சிலர்சில ரோடும் சேர்ந்து
வந்தனர் வாழ்வில் லாதார் வாழ்வோரை வாழ்த்து வோராய்!
கம்பங்காடு தம்பிக்க வைத்தல்
'வளத்துக்கு வரம்பு தீர்க்க, வானகம் மனது வைத்துத்
துளித்துக்கொண் டிருந்தா லூர்க்குள் தொழிலாளர் துயரம் தீர்க்கக்
குளத்துக்கா டொன்று போதும்; குதிர்க்குறை கம்பு தீர்க்கும்!
களத்துக்கு ளிடத்தைத் தீர்க்கும் கதிரெலாம் கொய்தா' லென்பார்.
இரண்டரை யடிநீ ளத்திற் கிம்மியுங் கம்மி யின்றி
யுருண்டரை கனத்துக் கீழ்மே லொன்றென மணிக ளொன்றித்
திரண்டருங் கதிர்கள் முற்றித் திகழ்வதைத் தீரக் கண்டு
மருண்டவ ரான மாதர், மகிழ்பவ ரானார் மற்றே!
கற்றபவர் கண்கள், கற்காக் காவியம் காணல் போலும்,
பெற்றவர் பிரிந்து பேணாப் பிள்ளையைக் காணல் போலும்,
உற்றவர் உற்றுப் பார்த்தே உவந்தவ ருளங்கு எிர்ந்து,
மற்றிவர் மனிதர்க் குள்ளே மாபெரும் அறிஞ; ரென்றார்.
கதிரறுக்கப் பணித்தல்
'மீனன மெல்லாம் மேவி மிளிர்ந்தன' வெனதின் றோர்க்கவ்
வானவெண் திங்க' ளென்ன வயங்கினோன் வழுத்த லானான்:
"மானன்ன மயிலு மன்ன மாதர்காள்! இன்று மாலை
தானென்னைக் கம்ப ளந்து தனமெண்ணும் வகைசெய் யுங்கள்!