56
மாமாவின் கோபாவேசம்
"மலருதூ மத்தம் பூவுன் மனத்தினில்! மதிகே டன்நீ;
'உலருதென் வயிறே' யென்ற ஊமைப்பிள் ளைக்கோ ரூனன் ,
'புலருது பொழுதும்! பொங்கல் புசிக்கலாம் பொறுத்'தென் றானாம்!
சிலரிது போன்று பேசிச் சீரழிந் திடல்நீ காணுய்!
குரங்கெண்ணிக் குதித்துப் பற்றிக் கொண்டூஞ்ச லாடும் கொம்பைச்
சுருங்கெண்ணிக் கொண்டு சுற்றும் சொறிநாயும் பற்றுங் கொல்லோ?
கருங்கண்ணி கரிசல் மண்ணில்; கத்தரி கலப்பு மண்ணில்!
ஒருங்கெண்ணி யுணரா தோன்நீ உளறுவா யூர்க்குள்" ளென்றார்.
நித்யன் பாகலைப் பலாவாக்கலாமெனல்
"கடுமுறை யாகப் பேசிக் கண்சிவக் கின்றீர்; கற்றோர்
நடுமுறைக் கொவ்வா தின்று நாய்நரி யெனவே நாவால்!
இடுமுறை யிட்டுக் கால இயல்பினை யறிந்தி யற்றப்
படுமுறை பயின்று பண்ணின் பாகல்ம௱ றும்ப லாவாய்!
பிறப்பினி லொன்றே; பேணல், பிணி மூப்பு, பெண்மை, யாண்மை
யிறப்பினி லொன்றே; கற்றாய்ந் திருந்தேற்ற மாக வாழும்
சிறப்பினி லொன்றே; சீராய்ச் சிந்தித்துத் தெளியா தேநீர்
மறுப்பினி லொன்றே மாறா மரமாகி விட்டீர் மாமா!
'நாவில்லை யேழைக்' கென்றே நாணய மின்றி நீங்கள்,
'ஈவில்லை, யிரக்க' மில்லை, என்னவே யிருந்து வாழ்வீர்!
பூவில்லை மணமு மில்லை பூஞ்சோலை தனிலே; போற்றத்
தேவில்லை யுலகி லென்னத் தெளிவித்து வைத்து விட்டீர்!