60
கொடுத்தான வுடனே, மாமா குறுக்கிட்டுக் குரலில் கோபம்
கடுத்தேறக் கையைக் காட்டிக் "கதையின்று முடிந்த தப்பா!
வுடுத்தான துணிக ளோடும் ஓடிப்போ வெளியில்! இங்கே
நொடித்தானும் நிற்கா தே!நீ நுழையாதே இனியிவ் வீட்டில்!
என்னைநீ யாரென் றெண்ணி யிருக்கின்றா யிதய மற்றோய்!
சென்னையா யிருந்தா லுன்னைச் சிறுசிறு துண்டாய்க் கொத்தித்
தின்னவே யிறைத்தி ருப்பேன் திரைகடல் மீன்கட் கெல்லாம்!
உன்னையுன் வாய்க்கொ ழுப்பே வுணர்த்தட்டு மொழுக்கிச் சீழாய்!
நாயினைக் குளிக்கப் பண்ணி நடுவீட்டை யலங்க ரித்துப்
பாயினை விரித்த மர்த்தின் பயனையஃ தறியு மா?தன்
வாயினை மேலும் சும்மா வைத்துக்கொண் டிருக்கு மா?நீ
போயினி! புகன்றேன்? நின்றால், பொல்லாதா னாவே" னென்றார்.
அண்ணனும் அண்ணியும் அவலமும் ஆறுதலும் அடைதல்
கண்ணீரா யொழுகா தேனும் கலங்கினா னண்ணன்; கண்ணில்
தெண்ணீராய் வடிய விட்டுத் தேம்பினா ளண்ணி! தம்பி,
"எண்ணீரா மியம்பி னீர்நீர்! ஏற்றுக்கொள் கின்றே?" னென்றே
புண்ணாறாப் புதிராய்ச் சொல்லிப் புன்னகை புரிந்தா னன்றே!
'முகைசெய்த முறுவல், மூச முறையாக மலர்ந்த' தென்ன
நகைசெய்து, நல்லோன் மேலும் நவின்றனன்; "நனியும் நல்ல
வகைசெய்து வைத்தீர்; வந்த வாழ்வினை வரவேற் காமற்
பகைசெய்த எனக்கு மிஃதோர் படிப்பினை மாமா!" வென்றே.