67
புகையொன்று; பொழுது போக்கப் புத்தக மொன்று; காசுத்
தொகையொன்று; தொடர்ந்து வாழ்க்கைத் துணையொன்று; துலங்கா நின்ற
நகையொன்று மட்டும் கற்று, நல்வாழ்வுக் கான, வேறு
வகையொன்றும் கற்கா அண்ணன் வார்த்தையுன் நலனுக் குத்தான்!
நீளநா னுனக்குச் சொல்லும் நெஞ்சுரம் பெற்றே னில்லை;
ஆளையும் பார்க்க வேண்டும்; அறிவையும் காக்க வேண்டும்;
நாளையும் பொழுதை யும்நாம் நனிநொந்து கொளலாம்! நீபோய்
வேளையில் குளித்து விட்டு விரைந்துவா வுண்ணற்" கென்றாள்.
சீற்றமாறிச் செல்வன் செல்லல்
'காரிருள் கவிந்த வீட்டில் கவின்விளக் கிலங்கிற்' றென்னப்
பேரருள் பெருகப் பேசிப் பெருமையைக் காத்தா னண்ணி,
ஊருருள் மான மாகி யோடாம லெனவே வோர்ந்து,
சீரருள் செல்வன் சென்றான், சிரித்தவா றங்கி ருந்தே.
கள்ளனகன்றபின் கதவின் கெடுபிடி
அழுவது தவிர்த்தால், பேசா தங்கிருந் தப்பால் செல்லற்
கெழுவது தவிர, வேறொன் றியலாத நிலையில் தன்பெண்,
'முழுவதும் முழுகா முன்பே முன்வந்து காத்தா' ளென்று
தொழவதற் கொப்பிற் றேனும், தோல்விக்கு வாயொப் பாதே!
"முற்றாத காயைக் கொய்து முழுக்கனி யாக்கி னாலும்
அற்றாகச் சுவையு ௫தஃ தருவருப் புறச்செய் தல்போல்,
கற்றாய்ந்து காணா இந்தக் காலரை வேக்காட் டான்முன் ,
சற்றாய்ந்து பாரா தென்னைச் சாய்த்தனை யம்மா!" வென்றார்.