77
நித்தியன் நெஞ்சொடு பேசுதல்
இனிக்கத்தான் பேசி 'யேழைக் கெசமான' னெனவே வாழ்த்தும்,
தனக்குத்தா னடிமை யாகித் தரமற்ற செயல்கள் செய்தால்,
துனிக்குத்தா னுள்ளா காமல் தொலைக்கத்தா னியலா தென்றும்!
உனக்குத்தா னெனக்குந் தானென் றுள்ளத்துக் குரைத்தான் நித்தியன்.
வேணியின் பணிவிடை
அப்பாவுக் கோவல்! 'காபி' அண்ணாவுக் கருந்தத் தேனீர்
தப்பாது தம்பிக் கும்!பால் தரவேண்டு மக்கா வுக்கும்!
எப்போதும் வழக்கா றிஃதென் றிதயமோர்ந் திருந்த வேணி,
ஒப்பெது மில்லா வாறா யுவந்துப சரித்த ளித்தாள்.
தம்பியின் வம்பு வார்த்தை
ஓவலைய் பருகும் மாமா, ஒருபோது மில்லா தின்று
காவலும் கட்டும் மீறிக் கலங்கியே கண்ணி னில்நீர்
தூவலைப் பார்த்த நித்யன், "துவையல்தான் மிகவும் காரம்;
நாவெலா மெரியு" தென்றான், நமுட்டிய நகைப்பி னோடும்!
சத்தியன் சாகசப் பேச்சு!
"ஈரமே யின்றி நெஞ்சில், இல்லாத குறைகள் கூறும்
வீரமே நினது வீரம்! விவகார ஞான மற்றோன்;
காரமே யில்லாப் பண்டம் காரமாம்! கல்யா ணத்தில்,
'ஆரமே பார' மென்றாங் கழுதாலு மழுவா" யென்றான்.
கலகலப்பான கட்டம்
கண்ணீரை விட்ட மாமா, 'கல்'லெனச் சிரித்தார்; கண்ணாய்த்
தண்ணீரைப் பருகும் நங்கை தட்டுண்டு தவித்தாள்; தம்பி,
"பண்ணார மெல்லாம் பற்றிப் பகருமுன், எனக்குப் பார்க்கும்
பெண்ணாரின் சம்ம தத்தைப் பெரியவர் பெறுக" வென்றான்.