78
அக்காவின் வினாவும் தங்கையின் விடையும்
பாதிச்சொத் தளித்தாள், மெத்தப் பரிவாகக் கூர்ந்து பார்த்து,
'நீதிச்சொ' லெனவே நேர்ந்!துன் நினைப்பென்ன வேணீ! யென்ன,
வீதிச்சொல் லறியாள்; வாழும் வீட்டுச்சொல் வெளியில் சொல்லா
மாதச்சொல் கேட்டு நாணி, "மனமொத்து நடப்பே" னென்றாள்.
நறுமணம் கமழத் திருமணம் முடிப்போ மெனல்
வெண்ணெயை வீட்டில் வைத்து வெளியில்போய் நெய்யைத் தேடும்
அண்ணனு மருமைத் தம்பி யகத்தினைப் புரிந்து கொண்”டுன்
எண்ணம்போல் முடிந்த தப்பா! என்றும்நீ யிவளை யுன்றன்
கண்ணெனக் காத்து வாழக் கல்யாணம் முடிப்போ" மென்றான்.
வணக்கமும் வாழ்த்தும்
உண்டபி னுவந்து மெல்ல ஊஞ்சலில் மாமா குந்த, அண்டையி லமர அண்ணன், அருகினி லண்ணி நிற்கக் கண்டதும் கருத்தாய் நித்யன், கனிவுறக் கையைக் கூப்பித் தண்டனிட் டெழவே, மாமா தனிவாழ்த்து வழங்க லானார்:
"காதல்கண் டரும்பின் நாட்டம்; காத்திடும் பொழுதே வேட்கை; காதல்கள் மலர்ந்த காலைக் கடிமணம்! கமழக் கட்டிக் காதல்கள் ஒருமித் தொன்றிக் கலந்ததில் தமைத்தா மீன்ற காதல்கான் முளையைக் காணின் கடைத்தேற்ற மாயிற் றன்றே!
புல்லாகிப் பொருந்தி வாழ்க பொதிகைபோல் பவரை! வீட்டில் மல்லிகை மலரே யாகி மணங்கமழ்ந் திடுக! மாறாக் கல்லாகி விடுக, காணாக் கடுந்துயர் மழையாய்க் காணின்! அல்லாகின் விளக்கே யாகி அறிஞன்நீ வாழ்க!" வென்றே!!
__________