பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



எனக்கு முன்னால் நெடிய மலை என்னைச் சுற்றிலும் ஒரே பள்ளத்தாக்குகள்!

காற்றின் பேரிரைச்சலால் உளறிக் கொண்டிருக்கும் குகையின் எதிரொலிகள்!

பேரிரைச்சலோடு கீழே விழும் நீர் வீழ்ச்சி!

கீச்சான் பூச்சிகளின் தொடரொலிகள்!

காட்டு விலங்குகளின் உறுமல்!

ஆனாலும், என் கண்கள் மட்டும் அறிஞன் ஒருவனின் கபாலத்தைப்போல் வளைந்திருக்கும், வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன!

வான் மண்டலத்தில் நான் பார்த்த பறவை - என் கண்களுக்கு இன்னும் தெரியவில்லை.

நான் இருக்கும் பகுதி, மலைப் பகுதியாக இருப்பினும் - பக்கத்திலே மக்கள் வாழும் பகுதியும் இருக்கவேண்டும்.

இரவு உணவை முடித்துவிட்ட கிராம மக்கள், பறை பொலியால் ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது.

அவர்களும் விழித்திருக்கிறார்கள் - நானும் விழித்திருக்கிறேன்.

அவர்களது எண்ணங்கள் கலையுலகத்தில் சஞ்சரிக்கின்றன!

என்னுடைய எண்ணங்கள் வான மண்டலத்தையே வியப்பாக கவனித்துக் கொண்டிருந்தன.

அந்த மக்கள், பகலெல்லாம் உழைத்து உழைத்து உருக்குலைந்தவர்கள்.

அந்திக்குப் பின்னால் களைப்பைப் போக்கிக் கொண்டனர் - இரவில் கலையைக் காண்கிறார்கள்!

நான் பகலெல்லாம், இம்மனிதச் சமுதாயத்தின் துன்பங்கள் எப்படி முளைக்கின்றன - தழைக்கின்றன இதற்கு மூலம் யார்?