பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



துரத்தி வந்தாலும் கைக்குக் கிட்டாத பேரொளிபோல்

பூர்த்தியாக்கப்பட்ட மூலதனம் போல -

என்றும் விழித்திருக்கின்ற விழியைப் போல்

திக்குகளுக்குப் பூராவும் விரைந்திருக்கின்ற தொடுவானம்

எளிய அல்லிக்கும் இறக்கும் காளானுக்கும்

நகரும் புழுக்களுக்கும்

ஊறும் எறும்புகளுக்கும்

இறவாத சக்தி, இதுவென்று காட்டிக் கொண்டு, இருக்கின்றது.

அதனுடைய இருதயத்தில், கோடிக் கணக்கான நனவுகளும் கவிழாத கனவுகளும் தினந்தோறும் வருகின்றன.

தொடுவான், நட்சத்திரத்தின் கூடாரமட்டுமல்ல!

நகர்ந்து நெளிகின்ற ஜீவன்களுக்கு முக்காடாகவும் இருக்கிறது.

அதோ இரவு...! அதன் மீது நடக்கிறது!

அதனை விடிந்த பிறகுதான் தேடவேண்டும்.