பக்கம்:அறிவின் கேள்வி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உண்மையில், இயற்கை ஏட்டின் பக்கங்களைப் புரட்டும் பொழுது ரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப் பெற்ற காவியம் அது என உணரும் போது தான்—

வாழ்வை நிர்ணயிக்கிற விதிகளைக் காணும் போது, வளர்ச்சிக்கு அடிப்படையான சட்டங்களை அறியும்போது தான்-அன்பே கடவுள் என்கிற சித்தாந்தம் எத்தகைய நோக்கு என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். கொடுமை, சீரழிவு,வெறுத்தொதுக்கப்பட்ட பாழ்மை இவைகளையே அனைத்திலும் காண்கிறோம், பிறக்கின்ற பிராணிகள் எல்லாவற்றிலும் ஒருசில தான் உயிர்வாழ முடிகிறது. இந்த நியதியினால் தான் வளர்ச்சி நீளுகிறது சாகடிக்கும் விதியே வளர்ச்சிக்குரிய சட்டம். நீண்ட சோக நாடகமே வாழ்க்கை. சிருஷ்டி மகத்தான குற்றம் மிருகங்களின், மனிதர்களின் வாழ்வில் மட்டுமே வீணடிப்பு என்பதில்லை. தார்மீக வாழ்விலும் வீண் வேலைதான்அதிகம், மனித உள்ளத்திலே முளையெடுத்திருக்கிறது அன்பு உணர்வு அது சிலருக்கு ஆறுதல் மற்றவர்க ளுக்கோ வாதனை. அன்புக்கு ஏங்கும் எத்தனை உள்ளங்கள் தனிமையிலும் பனித்தனத்தாலும் பாழாகின்றன. இப்படி இருந்திருக்கலாகாதா என இன்பக்கனவு தேக்கி அடுப்பங்கரையில் வாடி யிருக்கும் வனிதா மணிகள் எத்தனைபேர்! இவ் வார்க்கதைகளைப் படித்ததும் தம் துயர் நினைவால் நீருகுக்க காத்திருக்கும் கண்கள் தான் எவ்வளவோ ! குளிர்பாறைக் கொடிய துயரவாழ்வே எவ்வளவு நெடியன ? நீ தரும் துயரங்கள்; எவ்வளவு அல்பமானவை உனது இன்பங்கள்!வருங்கால வருத்தங்களாய் மாறப் போகிற அழகுக் குழந்தைகள் தானே இன்றைய இன்பங்கள்? இன்பமென்பது ஓடும் கனவல்லாமல் வேறு என்ன ?