பக்கம்:அறிவியற் சோலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அறிவியற் சோலை னிக்கை பத்துக்கோடிக்கு மேற்பட்டதாகும். இது ஒன்றினைக் கொண்டு, இம் மொழி பண்டுதொட்டுப் பயின்று வந்த பண்பட்ட கிரேக்க மொழியை விடச் சிறந்தது, அல்லது அதேயளவு சிறப்பினைக் கொண் டது என்று கூறுவதற்கில்லை. இன்று கிரேக்க மொழி யினை எண்பது லட்சம் மக்கள்தான் பேசுகிருர்களென் ருலும் தற்காலத்தில் தலைசிறந்தவை எனக் கருதப் படும் பல மொழிகளில், ஒரு சில மொழிகள் வளமாவ தற்கும், உருவாவதற்கும் காரணமான தாய்மொழி என்ற அளவில் கிரேக்க மொழி தனிச் சிறப்புக் கொண்டுள்ளது. அரசியல் செல்வாக்கும், கலாசாரமும் மொழித் துறையில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஓரளவு &5ITIT6öUTLDIT&E அமைகின்றன எனக் கூறலாம். தொண்ணுறு லட்ச மக்களால் பேசப்படும் டச்சு மொழியானது, அவர்கள் வியாபார அடிப்படையில் முதலில் வந்து பின்னர் ஆதிக்கம் செலுத்திய சாவா, சுமத்திரா, போர்னியோ, செலெபெசு போன்ற இடங்களில் வாழும் மக்களாலும் பேசப்படுகின்றது. இங்குள்ள மக்கள் தங்கள் தாய்மொழியாகிய மலாய் மொழிக்கு எவ்வளவு சிறப்புத் தருகின்றனரோ அவ்வளவு சிறப்பினை டச்சு மொழிக்குக் கொடுக் கின்றனர். இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த மற்ருெரு மொழி பிரெஞ்சு மொழியாகும். இம்மொழி உலகில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படு கின்றது. நாலுகோடியே இருபது லட்சம் பிரெஞ்சு மக்கள் தவிர, பெல்சியம், சுவிட்சர்லாந்து, இவ்விரண் டிடங்களிலும் இம்மொழியினைப் பேசும் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/12&oldid=739246" இலிருந்து மீள்விக்கப்பட்டது