பக்கம்:அறிவியற் சோலை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B அறிவியற் சோலை பெருகி வாழ்வது ஒன்று. இறுதியிற் கூறியதற்குத் தமிழைக் கூறலாம். இந்திய அரசியலாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட மொழிகள் பதின்ைகு. அவை திரா விட-ஆரிய இன மொழிகள். திராவிட மொழிகள் நான்கு; ஆரிய மொழிகள் மீத முள்ளவை. இவை போக ஆச்ட்ரிய மொழிகள், சீன-திபேத்து மொழிகள் என்ற இருவகையினங்களும் அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்டவை. இவை இரண்டில் முன்னது வரலாற்றிற்கு முந்திய மொழி; பின்னது அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்திய மொழி யினங்கள் நான்கு என்க. திராவிட மொழிகள் ஆராய்ச்சி உலகில் திராவிட-ஆரியர் தோற்றம், அவர் தம் மொழிகள், அவற்றின் பழமை, செழுமை, சிறப்பு முதலியவற்றில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆல்ை திராவிடர்கள் இந்நாட்டிற்கே உரியவர்கள்; இந்நாடே அவர் தம் சொந்த நாடு , ஆரியர்கள் அந்நியர்கள். காடும் மேடும் கடந்து வந்து குடி யேறியவர்கள் என்பதில்மட்டும் கருத்துவேறுபாடு கொள்வதில்லை. இவ்வுண்மையினைச் சொல்லத் தவறு வதுமில்லை. எனவே ஆரியர் இந்நாட்டிற்கு வருமுன், இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் திராவிட மொழியாம் பழந் தமிழே வழங்கி வந்திருப்பதில் ஐயமில்லை. பின்னர் பிழைப்பு நாடிவந்த ஆரியர் தமது மொழியினைத் தமிழோடு கலந்தனர்; வாய்ப்புக் கள் ஏற்பட்ட போதெல்லாம் மிகவாகக் கலந்தனர். எனவே தமிழ் இடங்கள் தோறும் உருமாறியது. அத்தகைய உருமாறிய மொழிகளைத் திருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/14&oldid=739248" இலிருந்து மீள்விக்கப்பட்டது