பக்கம்:அறிவியற் சோலை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O அறிவியற் சோலை --- -------


யுடைய ராகோசி தன் உள்ளக் கிடக்கைகளை யெல்லாம் அங்குள்ள உழைப்பாளிகளிடையேயும், போர்வீரர்களிடையேயும் பரப்பி வருவாராயினர். துண்டுப் பிரசுரங்கள் பலவற்றை எழுதி வெளி யிட்டார். இதற்கிடையில் புடா பெஸ்ட் நகரத் தில் தொழிலாளர்களும் போர்வீரர்களும் ஒன்று சேர்ந்து உழைத்து வலிமையினைப் பெறவே, அதுவரை ஆட்சி செலுத்தி வந்த ஹாப்ஸ்பர்க் அரசாங்கம் வீழ்ச்சியுற்றது. ஆல்ை இப் புதிய அரசாங்கமும் பணம் படைத்தோருக்குப் பக்கபலமாக விளங்கியது. சேற்றிலும் செந்தாமரை ' இருப்பது போல் அக்கூட்டத்தில் இருந்த நற்குணம் படைத்த ஒருசிலர் இதனைக் கண்டு ஆற்ருது , மறுபடியும் மற்ருெரு புரட்சியை ஆரம்பிக்கத் திட்டம் தீட்டினர். கி. பி. 1918 நவம்பரில், பலரது முயற்சியின் காரண மாய் ஹங்கேரியில் பொதுவுடமைக் கட்சி ஒன்று தொடங்கப்பெற்றது. இக்கட்சியின் தோற்றத் திற்குக் காரணமாய் விளங்கியவர்களில் ராகோசியும் ஒருவராவர். சில வாரங்களில் இக்கட்சிக்கு உறுப் பினர்கள் பெருவாரியாகச் சேரலாயினர். குறுகிய காலத்தில் கூட்டம் பெருகியது. மலை போன்ற செல்வந்தர் , நிலை இழந்த கூட்டத்தார் என்ற பேதமிராது ஏல்லார்க்கும் எல்லாம் ' என்ற நிலை இருக்கவேண்டும் ; தொழிலாலைகள் தொழிலாளி களின் வசம்தான் இருக்கவேண்டும் ; உழைப்பாளி கிளும் அரசாங்கத்தில் உயர்வை அடைய வேண்டும் என்பவைகளே இவர்களது கொள்கைகளாகும். முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் ' என்றபடி ராகோசியின் அரும் பெரும் திறனைக் கண்டோர் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/26&oldid=739260" இலிருந்து மீள்விக்கப்பட்டது