பக்கம்:அறிவியற் சோலை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அறிவியற் சோலை --- --- தேர்ந்தெடுக்கப்பட்ட அவையினரால் ஆட்சி நடத் பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மக்களாட் வேதனையின் அடிப்படையில் எழுந்தது தான் சாதனை என்பதற்கேற்ப, புரட்சி காரணமாய் ஹங்கேரி மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. 1919-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலில் ஹங்கேரி நாட்டில் மக்களாட்சி மலரலாயிற்று. மக்கள் தங்களுக்கென ஒரு நல்ல அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். புரட்சி செய்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் குழுவினர் பதவியேற்றனர். பொதுவுடை மைக் கட்சித் தலைவர்களைக் கலந்து திட்டங்கள் தீட்டப்பெற்றன ; சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆலைகள், கணிப்பொருட் சுரங்கங்கள், வங்கிகள், இவைகள் யாவும் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. பரந்த வயல் வெளிக ளெல்லாம் அரசாங்கத்தின் மேற்பார்வைக்குட் பட்டன. தொடர் வண்டி பற்றிய ஆட்சிப் பொறுப் பினையும் அரசியலாரே ஏற்றனர். புரட்சியின்போது வாலிபர் படைக்குத் தளபதியாய் விளங்கியவர்தான் நம் ராகோசி. அதுகால் அவருக்கு வயது இருபத் தேழுதான். வியாபாரத் துறைக்கு மக்கள் துணைப் பிரதிநிதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நாட்டின் பொருள் உற்பத்தித் துறைக்கு மக்கள் பிரதிநிதியாகப் பதவியேற்ருர், எதிர்பாராதவிதமாய் பொருளாதாரச் சிக்கல்கள் பல நாட்டைச் சுற்றிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/28&oldid=739262" இலிருந்து மீள்விக்கப்பட்டது