பக்கம்:அறிவியற் சோலை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அறிவியற் சோலை -- ----------- - - ------ - - - - லிச வாதிகள் இவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து, இன்னல் பல தர ஆரம்பித்தனர். இவ்வாறு இரு பக்கங்களிலிருந்தும் தாக்குதல் ஏற்பட்டும் ராகோசி சிறிதும் தளரவில்லை. இப் புற்றீசல்களுக்கெல்லாம் புரண்டு கொடுத்துவிடவில்லை. முதலில் உள்நாட்டுக் கலகத்தை அடக்குவதில் முனைந்தார். எதிரிகளது கொட்டத்தினை அடக்கி, அவர்களை மட்டம் தட்டி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். அதன் பின்னர் உழைப்பாளிகள் ஒன்று திரண்டனர். சிங்கங்கள் உலவும் இடத்தில் சிறு நரிகளுக்கு வேலையென்ன என்று சீறி யெழுந்தனர். மக்கள் வெள்ளத்தினைத் தடுத்து நிறுத்த அணையேது இந்த அவனியிலே ! காத்து நிறுத்துதற்குக் கரையும் தான் உண்டா ! இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் அவர் வாயிலாகவே கேட்போம். " பொதுவுடமை வாதிகளின் ஊக்கம் மடி யாது ஊறிய வண்ணமாயிருந்தது. பொதுவுடமைத் தலைவர்கள் அஞ்சாது அறைகூவல் விடுத்தனர். அது கேட்ட மக்கள் விழிப்புற்று வீறுகொண்டு எழுந்தனர். போர் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எல்லாருடைய எண்ணமாகும். இடைவிடாத உழைப் பின் பயனுய் ஏறத்தாழ 90,000 தொழிலாளர் படையிற் சேர்ந்தனர்." சால்கோட்டர்ஜன் என்பது ஹங்கேரியின் நிலக் கரிச் சுரங்கமாகும். உழைப்பாளிகளுக்குக் 6yᏜᏏ கொடுத்து உதவும் இடம். அவ்விடத்தை மாற்ருர் நெருங்கும்போது ராகோசி அங்கு அனுப்பப்பட்டார். ஆல்ை இடது சாரி சோசியலிசக் கட்சியினர் எதிரிகளை எதிர்க்க விரும்பாது முன்னேற்றத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/30&oldid=739265" இலிருந்து மீள்விக்கப்பட்டது