பக்கம்:அறிவியற் சோலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகோசி மட்டும் விதிவிலக்கா ! 1920-லிருந்து 1925, வரை இவருக்கு ஒரு பெருஞ் சோதனைக்கால மென்றே கூறவேண்டும். இவர் 1919-ஆம் ஆண்டில் ஆகஸ்டு இருபதாம் நாள் ஆஸ்டிரியாவைக் கடந்து செல்லும் பொழுது அவ்வரசாங்கம் இவரை வியன் ளுவில் சிறைப்படுத்தியது. இவரது துணைவர்களும் சிறையில் தள்ளப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட எல்லையினைத் தாண்டுதல் கூடாது என்று தடை விதித்தனர். எட்டு மாதங்களுக்குப் பின்னர் ராகோசி உண்ணு நோன்பினை மேற்கொண்டார். துணைவர் களும் அவரையே பின்பற்றினர். பயன் முழு வெற்றியே. எனவே இவ்வீரர்கள். அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை அடைந்த ராகோசி மறுபடியும் வீறுகொண்டெழுந்தார். வியன் விைல் நடைபெற்ற கூட்டங்கள் பலவற்றிலும் கலந்து வீரமுழக்கம் செய்யவே, இவரை மறு முறையும் அரசாங்கம் சிறையில் தள்ளியது. இதனைக் கேள்வியுற்ற உழைப்பாளிகள் அனைவரும் ஒன்று திரண்டனர் ; தாங்கள் விளைவித்த உணவுப் பொருட்களை நாட்டிற்குக் கொடுத்துதவ மறுத்தனர். எனவே ராகோசி சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட் டார். விடுதலையடைந்த அவர் தம் தாய் நாட் டிர் குத் திரும்பிச் செல்லுவதற்கு, ஆஸ்டிரிய உழைப் புளிகள் பெரிதும் உதவினர். தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் ராகோசி செர்மனியில் நீங்கி o பின்னர் லெனின்கிராடை அடைந்தார். அது கால் ரஷ்யத் தலைவர் லெனின் இவருக்கு அழைப்பு அனுப்பவே, இவர் லெனினைக் காண்பதற் ாக வேண்டி, மாஸ்கோ வந்தடைந்தார். இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/33&oldid=739268" இலிருந்து மீள்விக்கப்பட்டது