பக்கம்:அறிவியற் சோலை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணும் உயர்வு தாழவு மனபபாண்மையினை ஒழித்துக் கட்டுவேன்.” இதனைக் கேட்ட நீதி மன்றத் தலைவர் 'நீ என்ன தீர்க்கதரிசியோ” என வினவினர். அது முற்றிலும் உண்மை என்பதற்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஹங்கேரியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி சான்று பகரு கின்றது. ராகோசி கூறியது போன்றே பத்தாண்டு களுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதலின் காரணமாய் நிலங்கள் யாவும் அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ராகோசி குற்றமற்றவர் என்று தெரிந்திருந்தும், அறங்கூறவையத்தோர் இறுதியில் அவருக்கு ஆயுள் தண்டனையே விதித்தனர். இத்தீர்ப்பை அறிந்த மக்கள் அனைவரும் அலறித் துடித்தனர். ஆண்டுகள் சில உருண்டோடின. இதற்கிடையில் சோவியத் அரசாங்கமானது, ராகோசியினை விடுதலை செய்வதே ாட்டிற்கு நன்மை பயப்பதாகும் என்று, ஹங்கேரி ஆட்சி பீடத்திலுள்ளவர்களுக்கு எடுத்துக் கூறியது. மேலும் ராகோசியை விடுவிப்பதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வதற்கு உழைப்பாளிகள் தயாரா புள்ளனர் என்பதையும் உணர்த்தினர். இதற்கும் செவி சாய்க்காமற் போகவே, சோவியத் அரசாங்க மானது, ராகோசி விடுதலை செய்யப்பட்டால் அவர் தங்களுடைய நாட்டிலேயே தங்குவாரென்றும், ஹங் கேரியில் தங்கமாட்டாரென்றும் கூறவே, இந்நிபந் தனையை ஒப்புக்கொண்டு ஹங்கேரி அரசாங்கம் ராகோசியினை உடனடியாக விடுதலை செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/43&oldid=739279" இலிருந்து மீள்விக்கப்பட்டது