பக்கம்:அறிவியற் சோலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளிகளின் தலைவன் 4.1 பெற்ருல், ஹங்கேரியும் செர்மனிய ஆதிக்கத்தி லிருந்து விடுபட்டே தீரும்”. இவருடைய இக் கருத்து. ஹங்கேரி நாடெங்கும் பரவலாயிற்று. இவரது பொன்மொழிகள் புடா பெஸ்ட் களிலெல்லாம் பொறிக்கப்பட் டன. எனவே ராகோசி நகரச் சுவர் யைப் பின்பற்றியவர்கள் வீரம் குன் ருது விளங்கினர். வெற்றியும் நாட்டு விடுதலையும் இதற்கிடையில் வோரன்எஜ் (Voronezh) என் னும் இடத்தில் நடந்த பெரும் போரில், ஹங்கேரி யின் படை, அதாவது சோவியத் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய படை, முற்றிலும் முறியடிக்கப் பட்டது. பெரும்பாலோர் சிறை செய்யப்பட்டனர். சிறை செய்யப்பட்டோர் அனைவரும் கல்வி அறிவில் லாத தொழிலாளர்களே. ஆதலால் அவர்களுக்கு சோவியத் அரசாங்கத்திலிருந்த ஹங்கேரி நாட்டுப் பொதுவுடமை வாதிகளால் கல்வி புகட்டப்பட்டது. இப்பணியில் ராகோசி தீவிரப் பங்கு கொண்டார். அவர்களது உள்ளத்திலே தாய் நாட்டின் விடுதலைக் காகப் போராட வேண்டும் என்னும் ஆர்வத்தை எழச் செய்தார். இதற்கிடையில் கி. பி. 1944ல், செர் மானிய நாட்டுப் படை பு ாபெஸ்ட் நகரினுள்ளே புகுந்தது. வெற்றி பெற்ற ஹிட்லர் ஹங்கேரியைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். எனவே ஹங்கேரியினை விடுவித்தற் பொருட்டு, பெரும் படை யொன்று சோவியத் நாட்டிலிருந்து புறப்பட்டது. போரும் நடந்தது. தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டோர் இப் படையுடன் சேர்ந்து வீரமுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/45&oldid=739281" இலிருந்து மீள்விக்கப்பட்டது