பக்கம்:அறிவியற் சோலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு தோற்றுவாய் உலகம் தோன்றிய காலத்திலிருந்தே விளை யாட்டு' என்ற உணர்ச்சி வாழத் தொடங்கிய ஒவ் வொரு நாட்டிலும் வாழ்க்கையில் கலந்திருக்கிறது. ஆல்ை அவ்வுணர்ச்சியினை ஒவ்வொரு நாட்டின ரும், தங்களது அறிவாலும், பண்பாட்டலும் தங்கள் வாழ்க்கை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட வகையில் ஒன்ருேடொன்று வேறுபடுகின்றன. நமது உடல் பல உறுப்புக்களைக் கொண்ட ஓர் மிக நுட்பமான கருவி போன்றதாகும். தொழிலில்லாது விளங்கும் கருவி எவ்வாறு பழுது படுமோ அது போன்று பயிற்சியற்ற உடம்பும் விரைவில் சீர் கெட்டுப்போய்விடும். சிறந்த பயிற்சி இருந்தால் உடலிலுள்ள கழிவுப் பொருள்களெல்லாம் வெளி யேறுகின்றன. மேலும் இரத்த ஓட்டம், பசி, நாடி நரம்புகளின் முதிர்ச்சி, மார்பு விசாலிப்பு, சிந்தளு சக்தி, புதிய பலம் முதலியவற்றையும் ஒருவன் பெறலாம். இது குறித்தே தேரையர் ஒருவர், சிலம்பமுதல் மல்யுத்தம் தேசிநடை கொள்ளின் பலம்பரவும் மெய்இறுகும் பன்னத்-துலங்குபசி உண்டாம் கபவாத மோடுவலி சூலையும்போம் உண்டாம் மனத்திட மும் ' எனப் பாடியுள்ளார். இத்தகைய உடற்பயிற்சியினை நன்கு விளையாடுவதல்ை ஒருவன் பெறமுடிகின்றது. நன்கு விளையாடி, உடலுரம் பெற்றவர்களே நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/47&oldid=739283" இலிருந்து மீள்விக்கப்பட்டது