பக்கம்:அறிவியற் சோலை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. அறிவியற் சோலை டிற்கு நலம் தேட முடியும் என்று கருதியே, பண் டைக் காலத்தில் கிரீசில் அரசியலார் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு, விளையாட்டில் வல்லாருக்கு ஆண்டுதோறும் பரிசளித்து ஊக்கமூட்டி வந்தனர் என்பதை ஒலிம்பிக் கேம்ஸ் (Olimpic games) என் பதைப்பற்றி அறிந்தோரும், கிரேக்க வரலாற்றினைப் படித்தோரும் அறிவர். இன்று மேலைநாடுகளில் ஒருவன் சிறந்த விளையாட்டுக்காரகை (good sportsman) விளங்குவானேயாகில், அவனை நாடும், ஏடும் வானளாவப் புகழ்கின்றன. ஆனல் தமிழ் நாட்டவரோ விளையாட்டையே கடவுளாக, வைத்து வழிபட்டார்களெனக் கூறலாம். தமிழ் நாட்டு மக்கள் ஆடற் கலையில் காணும் அழகினைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர் என்பதை எடுத்துக் காட்டவே, இன்றும் இறைவன் தில்லையில் நடம் புரிந்து நம் நாட்டத்தை யெல்லாம் கவர்ந்து நிற்கின்ருன். தண்ட மிழ் நாட்டுப் புலவரொருவர் இது கருதியே இறை வனை, அலகிலா விளையாட்டுடையவர் எனக் குறிப் பிடுகின்ருர். இறைவனே சிறந்த ஆட்டக்காரணுகும். மாண்புடைய மதுரையம்பதியிலே வீற்றிருக்கும் இறைவனுர் அன்று அடியவர்களைக் காத்தற் பொருட்டு, அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தனரன்ருே ! தமிழ் விளையாட்டின் தனிச் சிறப்பு ---, -o பண்டைத் தமிழரது விளையாட்டு நம் நாட்டின் நில்வளத்திற்குத் தகுந்தபடி, பருவ வேறுபாடு களுக்கு ஏற்றபடி, மக்களின் வாழ்க்கைத் தராதரங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/48&oldid=739284" இலிருந்து மீள்விக்கப்பட்டது