பக்கம்:அறிவியற் சோலை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு 4.7 யாடல், கழங்கு, பந்து, அம்மானை, முதலியன ஆடல், சிறு சோறு சமைத்தல், பாவையாடல், முதலியன சிறு பெண்களின் பொழுது போக்காகும். மார்கழி மாதத்தில் விடியற்காலை நீர்த்துறையை அடைந்து நீராடிப் பாடித் தொழுவதையும், வேங்கை மரத்தி னடியிற் சென்று புலி புலி என்று கூவி மலர் பறிப்பதையும், பெண்கள் பெரிதும் விரும்பினர். பந்து விளையாடல் என்பது அன்று பெண்களுக்கே உரிய விளையாட்டாய் விளங்கியது. குறிஞ்சி நிலக் கடவுளுக்கு எடுக்கும் விழாக்களில் பெண்கள் வேலன் வேடம் புனைந்து ஆடி மகிழ்வர். இவ்வாறு அன்று மகளிர் ஓடியாடி விளையாடினதால் அவர்கள் உடற் கட்டுடன் நோயின்றி வாழ்ந்தனர். குறிஞ்சி நிலத்துச் சிறுவர்கள் வேம்பின் நிழலில் நெல்லிக் காய்களை வட்டாகக் கொண்டு அரங்காடினர். அதாவது தரை யில் கட்டளையாகக் கோடு கிழித்து, அரங்கு இழைத்து அதில் நெல்லிக் காயை வீசி யெறிந்து, குதித்துத் தாவிக் காலால் செதுக்கித் தள்ளிக் கோட்டில் படா மல் குதித்து விளையாடுவர். இன்று இவ் விளை பாட்டுப் பாண்டி விளையாட்டென்று பகரப்படு கின்றது. ஒரு சிற்றுாரின் வேப்பமரத்து நிழலில் இன் லும் கல்வி கற்கத் தொடங்காத சிறுவர்கள் நெல்லி வட்டாடும் காட்சியினை , ' ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பெரியரை வேன்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிருஅர் நெல்லிவட் டாடும் வில்லே ருழவர் வெம்முனைச் சிறுார் இன் நற்றினை கூறுகின்றது. தமிழ்ப் பிள்ளைகள் சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/51&oldid=739288" இலிருந்து மீள்விக்கப்பட்டது