பக்கம்:அறிவியற் சோலை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் பாரி 57 சிந்தையில் கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்ட நாவீறு படைத்த நால்வரில் ஒருவரான சுந்தரரால் மிகச் சிறந்த முறையில் .ே சப்பெறு கின்றது. இதுவொன்றே இவனது வள்ளன்மை யைத் தெள்ளிதிற் புலப்படுத்தும். மேலும் சில தனிப் பாடல்களும் பாரியைப் 1ற்றிக் குறிப்பிடு கின்றன. உள்ளத்தினை கிளறி உணர்ச்சியை ஊட்ட வல்ல பாடல்கள் நிறைந்த சங்க நூல்களை அருளிய பெரும் புலவர்களுள் தலைசிறந்தவர்களாகிய -சங்க இலக்கியத்தில் மிகுதிய கப் பாடல்களைப் பாடியவரும், பாரிக்காகவே வாழ்ந்து உயிர் நீத்தவரு t * + o ro = மாகிய கபிலராலும், அதியமானையே பாடி அளப் பரும் புகழ் பெற்ற நல்லிசை வாய்ந்த சொல்லிசை வல்லுநராகிய ஒளவையாராலும், சமயத் துறையில் ஈடுபட்ட நக்கீரராலும் பாரி வள்ளல் பாடப் பெற் றுள்ளான். ஆல்ை இற்றைத் தமிழ் நாட்டில் பாரியின் பெயர் தெரியாமலிருப்பது மிகவும் வருந்தத் தக்கதே. இதற்குக் காரணம் ஒன்று பாரியைப்பற்றிய தனிப்பட்ட இலக்கியமில்லாததும் , மற்ருென்று சங்க

  • = - + IÆ + - - (R, f = ++ இலக்கியம் படிக்கும் தொடர்பற்றுப் போனதும் ஆகும்.

பாரியும் பறம்புப் போரும் பாண்டியன் வேண்டிய 1க்கால், பாரி மகள் கொடுக்க மறுக்கவே, அப்பாண்டிய மன்னன் பாரி யின் மீது போர் தொடுத்தனன் , அவனுக்கு உதவி யாகச் சோழனும், சேரனும் தங்கள் படைகளுடன் வந்து சேர்ந்தனர். இவ்வாறு தமிழ்நாட்டு மூவேந் தரும் பாரியின் பறம்பினை முற்றுகையிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/61&oldid=739299" இலிருந்து மீள்விக்கப்பட்டது