பக்கம்:அறிவியற் சோலை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் பாரி _ 63 சித்திரித்துக் காட்டுகின்ருர், இதையே கபிலரும் விச்சிக்கோவிடம் பாரி மகளிர்க்காக மன்ருடும் பொழுது,

பூத்தலை யருஅப் புனே கொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடாதாயினும் கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

பறந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் ' என்று கொடிக்கு இரக்கம் காட்டியவனின் பெண் களுக்கு இரக்கம் காட்டுங்கள் என்று பாடியிருப்பது, படிப்போர் உள்ளத்தைத் தொடுவதாய் உள்ளது. பாரியின் பறம்பு பாரியின் மலை, சுனை, இவற்றைப்பற்றிப் பல புலவர்கள் பலபடப் பாடியுள்ளனர். கபிலர் பறம்பு நாட்டைப் பிரியுங்கால், இதுவரை தமக்கு உறை யுளும் உணவும் நல்கி இன்புறச் செய்த இனிய பறம் பினது நன்றியை அவரால் மறக்க முடியவில்லை. அதனுல் அவருள்ளத்தே பிரிவாற்ருமை தோன்றிப் பேதுறுத்த நெஞ்சு கலங்கி, பறம்பினை நோக்கி நின்று பின்வருமாறு இரங்கிக் கூறுகின்ருர். " தேன் வழங்கும் இருக்கையை உடைய உயர்ந் தோணுகிய பாரியின் மலை, அவன் உயிருடன் இருந்த காலத்துப் புகழால் உயர்ந்து, காணுதார்க்கும் செவிப்புலகைத் தோன்றும் ; இப்பொழுது பிற மலைகள் போல் கட்புலனளவிற்ருய், இவ்விடத்து நின்ருேர்க்கும் தோன்றும், சிறிது எல்லை போய் நின்ருேர்க்கும் தோன்றும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/67&oldid=739305" இலிருந்து மீள்விக்கப்பட்டது