பக்கம்:அறிவியற் சோலை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன். முன்னுரை உலக மக்களை இரு வகையாகப் பிரிக்கலாம். தாமாகவே இயன்ற வரை முயன்று உடலை வளைத்து உழைத்து ஊதியம் பெற்று வாழ விரும்புவோர் ஒரு 6a I6ᏈᎠᏜᏏ . தாமுழைக்காது, பிற உழைப்பாளர் களை அடக்கி ஒடுக்கி, அவ்வுழைப்பாளர் களின் உழைப்பின் பயனை நுகர்ந்து வாழ எண்ணுவோர் மற்ருெரு வகை. ஆல்ை நல்ல வேளையாக முன்னையோர் பலர் ; பின்னையோர் சிலர். இச்சிலர் அப்பலரை அடக்கு கின்றனர்; ஆள்கின்றனர்; அவர் தம் உழைப்பால் வாழ்கின்றனர். இந்தச் சிலரின் கொடுமைகள் அளவு கடந்து செல்லும்பொழுது அறிஞர்கள்ஏழை பங்காளர்கள்-விடுதலை வீரர்கள் தோன்றித் தங்களின் அறிவுத்திறத்தில்ை, ஆள்வினையால் அடிமைகளின் ஊழ்வினையினை மாற்றி, எப்பாடுபட்டே னும், உயிரைக் கொடுத்தேனும், அக்கொடுங்கோலர் களின் கொடுங்கோன்மையிலிருந்து, மக்களை விடு வித்து விடுதலை வழங்கி மீண்டும் வாழ்வளிப்பதுண்டு. அத்தகைய விடுதலை வீரர்களிலே ஒருவர் 'இலிங்கன்.' கட்டபொம்மன் என்றவுடன் வரிகொடா இயக்கம் நினைவுக்கு வரும் , வ. உ. சி. என்றவுடன் சுதேசிக் கப்பல் தோன்றும் ; காந்தியார் என்றதும் தீண்டாமை நெஞ்சிற்கு வரும். அதுபோல ஆபிரகாம்லிங்கன் என்றதும் அடிமை ஒழிப்பு நினைவுக்கு வரும். சி வாயிரம் மக்களைப் பலியிட்டுப் பலவாயிரம் நீக்ரோ அடிமைகளின் கரங்களிலே கிடந்த அடிமை விலங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/69&oldid=739307" இலிருந்து மீள்விக்கப்பட்டது