பக்கம்:அறிவியற் சோலை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வரலாறு தோற்றுவாய் அழற் பிழம்பாக விளங்கிய உலகம் படிப்படி யாகக் குளிர்ந்து குளிர்ந்து உலகத்தின் மேற்பகுதிகள் அனைத்தும், உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற வகை யிலே அமையலாயிற்று. பின்பு சில பல உயிரினங் கள் தோன்றி வளர்ந்தன. இறுதியில் மனிதன் தோன்றினன். தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லாவுயிர்களையும் போன்றே மனிதனும் வாழ்ந்தான். பிற விலங்கினங்களைப் போன்றே காயும், கிழங்கும், கனியும், புலாலும் உண்டான் , துன்பம் வந்தபோது ஒருவகை ஒலியும், இன்பம் பெற்றபோது ஒருவகை ஒலியும், எழுப்பி உலவின்ை. பிறகு சிறிது அறிவு பெற்ருன். இலையாடை, தழையாடை, தோலாடை, மரப்பட்டையாடை எனப் பலவகை ஆடைகளை உடுத் தின்ை. குகைகளில் வாழ்ந்தான். இங்ங்ணம் உண விலும், உடையிலும், உறையுளிலும் படிப்படியாக முன்னேறியது போன்றே அறிவிலும்-உள்ளுணர்வு களை வெளியிடுவதிலும் முன்னேறினன். s தனியாக அலைந்து விலங்குகளைப் போன்றே பேசிவந்த மனிதனுக்கு, மற்றெரு மனிதனைச் சந்திக் கும் பொழுது பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் இருவரும் தவித்தனர். பிறகு அந்தத் தவிப்பு படிப்படியாக மறைந்தது. இந்த இரண்டு, பல என்ற நிலை ஏற்பட்டு மனிதன் கூட்டமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/7&oldid=739308" இலிருந்து மீள்விக்கப்பட்டது