பக்கம்:அறிவியற் சோலை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மைப்போல உருவத்தினையும் கொண்டுள்ளார்கள்; பேசவும் செய்கிருர்கள். அப்படியிருக்க இவர்களுக் கேன் உரிமையில்லை; ஆண்டவன் முன் ஆண்டானும் ஒன்றே, அடிமையுமொன்றே; மன்னனும் ஒன்றே, ■ - 圖 H so, :- 彈 圖 曙 மன்னுயிரும் ஒன்றே; அதுபோல இவர்களும் நம்மைப் போன்றவர்களே, இருவரும் ஓரினம், ஒர்குலம்; இவர் களும் நம்மைப்போல விடுதலை வாழ்வு, வீரவாழ்வு நடாத்தல் வேண்டும்; இவர்கள் கரங்களைக் கட்டி யிருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப் படல் வேண்டும்' எனப் பலவாறு எண்ணினர்; இதயம் அனலிடு மெழுகாயிற்று. கண்கள் அருவியாயின; உள்ளம் எரிமலையாயிற்று. இக்கோர காட்சி மனத் திலே ஆரு மாருப் புண்ணை உண்டாக்கியது. எனவே "உயிரே போயினும் இக்கொடுமையை ஒழிப்பேன்; அடிமைக்குச் சாவுமணி அடிப்பேன்; அடிமை வாழ் வினைக் குழிதோண்டிப் புதைப்பேன்; பல்லாயிரம் நீக் ரோக்களுக்கு விடுதலை வழங்குவேன்' என வீர முழக்கத்துடன் வஞ்சினங் கூறிக் கொண்டார். அப் பொழுது பிற்காலத்திலே பல்லாயிர மக்களின் அடிமை விலங்கொடித்த விடுதலை வீரனுக விளங்கு 畢 ■ ~i o ■ - i. Çብ 畢 Hவதைப் பற்றிக் கனவுக் கூடக் கண்டிரார் இலிங்கன். முடிவிலே இலிங்கன் உள்ளத்திலே நியூ ஆர்லி யன்சு சந்தை விடுதலை வித்தை விதைத்து விட்டது. அரசியல் வாழ்க்கை அமெரிக்காவின் அரசியலமைப்பிலே, நிக்ரோக் களுக்கு விடுதலை தருகின்ற அடிமை ஒழிப்புச் சட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/74&oldid=739313" இலிருந்து மீள்விக்கப்பட்டது