பக்கம்:அறிவியற் சோலை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பட்டாலொழிய நீக்ரோக்கள் விடுதலை பெற முடியாது. அதற்கு வழி ? இலிங்கன் அரசியலில் ஈடுபட வேண்டும்; தலைவராக வேண்டும். எனவே 1832இல் சட்டசபை உறுப்பினர் பதவிக்காகத் தேர்த லில் நின்ருர், ஆளுல் வெற்றிபெறவில்லை. எனி னும் மனவுறுதியை இழக்கவில்லை. 1834இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ருர். அதன் பின் நடந்த மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற் ருர். இலிய்ைசு சட்ட மன்றத்தில் அவர் பேசிய பேச்சு ஒவ்வொன்றும் அவரது அறிவின் ஆழத்தை, விரிவை, செறிவைப் பளிங்கென விளக்கும் வகையில் அமைந்தது. அதுமட்டுமல்ல. அப்பேச்சுக்கள் ஏனை யோரை இலிங்கன் தன்னிகரில்லாத் தலைவர் என உள்ளத்தில் எண்ணுமாறும் செய்தன. சட்டமன்ற உறுப்பினரான பின்பு மக்களிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினுர். மக்களோடு இரண்டறக் கலந்து வாழலானர்; மக்களின் குரலையும் மகேசன் குரலையும் ஒன்ருகவே கருதினர்; மக்கள் தீர்ப்பே திட்டமே நாட்டை நலம்பெறச் செய்யும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு செயலாற்றிஞர். எட்டாண்டுச் சட்டமன்ற உறுப்பினர் வாழ் விலே இலிங்கன் தமது சட்ட அறிவை நன்கு பெருக் கிக் கொண்டார். அனைவரும் அறிந்த பெரும் வழக் கறிஞரானர். இவ்வாருண் அரசியல் வாழ்விலே ஒரு மாது குறுக்கிட்டாள். அம்மாதின் மீது இலிங்கன் காதல் கொண்டார்; எனினும் கடமையினை மறந்தா ரில்லை. ஆனல் விரைவில் அம்மாது விண்ணுலகம் o + = - - - - * of சென்ருர். இலிங்கனின் துக்கம் எல்லை மீறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/75&oldid=739314" இலிருந்து மீள்விக்கப்பட்டது