பக்கம்:அறிவியற் சோலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 85 பின்பு குண்டடிபட்ட இலிங்கனை அண்மையி லுள்ள மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். இரவு முழுவதும் வாசிங்டன் மக்கள் அவரைச் சூழ்ந்து அவரது உயிருக்காக இறைவனை இறைஞ்சித் தொழுது அழுது நின்றனர். மறுநாட் காலையில் விடுதலை ஒளி மெதுவாக அனேந்துவிட்டது. அமெரிக்க மக்கள் ஆவினைப் பிரிந்த கன்றெனக் கதறினர். பின்பு அருகிருந்த இலிங்கன் நண்பர் கிடாண்டன் இலிங்கன் நிலைத்த வாழ்வு பெற்று விட்டார் ” என்ருர். முடிவுரை உலக வரலாற்றிலே நாம் எத்தனையோ விடுதலை வீரர்களைச் சந்திக்கிருேம். ஆணுல் அவர்கள் வேறு : இலிங்கன் வேறு. அவர் களெல்லோரும் பிறநாட் டான் ஆட்சியிலிருந்து தாங்கள் விடுதலை பெறப் போராடியுள்ளனர். ஆளுல் இலிங்கன் அப்படியல்ல ; இவர் நீக்ரோ என்ற வேருேம் இனத்தின் விடுதலைக் காகப் பாடுபட்டார். எனவே உலக வரலாற்றிலே ஒரு பெரும் I-1351 மாற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்தியவர் விடுதலை வீரர் இலிங்கன் என்பதிலே

ஐயமும் உண்டோ : _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/89&oldid=739329" இலிருந்து மீள்விக்கப்பட்டது