பக்கம்:அறிவியற் சோலை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியற் சோலை து ம்ை உண்மையுடனும் உழைக்க விரும்பும் அவர் களது பேருள்ளம் முதலியன நலிவுற்ற அந்நாடு விரைவில் நலம் பெறுவதற்குப் பேருதவி புரிகின்றன. தொழில் வளம் ،ހ' ( இன்று சப்பான் மிகவும் முன்னேறிய நாகரிக நாடுகளில் ஒன்ருக விளங்குகின்றது. ஏனைய நாட்டுப் புத்தம் புதிய பெரிய தொழில்களைப் பெருக்கி வளர்ப் பதில், சப்பான் ஈடு இணையற்றதாய் விளங்குகின்றது. தொழிற்றுறையில் பிற நாட்டாரைப் பார்த்து முன்னேறுவதில், அந்நாடு கைதேர்ந்தது. புதிய தொழிலைப் பார்த்தால் போதும் ; உடனே அத் தொழிலைப் பெருக்கி வளர்த்து அத் தொழில் தோன்றிய நாட்டை விட மிகவும் மலிவாகப் பொருள் களை மக்களுக்கு நல்கும் சிறப்பினையுடையது அந் நாடு. மேலும் சப்பானிய மக்கள் நுணுக்கமான - கடினமான தொழில்களைப் புரிந்து கொள்வதில் பேருக்கம் காட்டுவதுடன் பேருழைப்புக் கொண்டு குறைந்த செலவில் பொருள்களைச் செய்து மலிவான விலைக்கு மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்கின்றனர். அரசினரால் நடத்தப்பெறும் பெரிய தொழிற்சாலை களைப் போலவே சிறிய தொழிற்சாலைகளும் இந் நாட்டில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். கல்விச் சிறப்பு இந்நாடு அளவில் சுருங்கியதாய் இருந்தாலும் ஆற்றலில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அந்நாட்டு மக்கள் அனைவரும் கல்வி அறிவுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/94&oldid=739335" இலிருந்து மீள்விக்கப்பட்டது